காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் உடல் நலம் பெற்றுத் திரும்ப அதிமுகவினர் பல்வேறு வேண்டுதல்களிலும் வழிபாட்டிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு. கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு உடல் நலம் பெற்று திரும்ப வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

“முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

முதல் அமைச்சர், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே உள்ளன. முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்” என கருணாந்தி தெரிவித்துள்ளார்.