கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பேருந்து உடைப்பு, கடையடைப்பு, வாகனங்களை தீக்கிரையாக்குதல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. கோவை கலவரம் போன்றதொரு சூழலை மீண்டும் இந்துத்துவ அமைப்புகள் உருவாக்கி வருவதாக சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இங்கே…

இர.இரா. தமிழ்க்கனல்கோவையில் இறுதி ஊர்வலத்துக்கு முன்பும் பின்பும் காலிகள் ஆங்காங்கே தறிகெட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். துடியலூர் பகுதியில் கேப்டன் தொலைக்காட்சியின் காணொலிப்பதிவாளர் ஒருவரை காலி கும்பல் தாக்கியுள்ளது. காவல்துறையினரின் ஒத்துழைப்பு இருந்தால் இந்த கும்பலின் வெறியாட்டத்தை அடக்கமுடியும் என்கிறார்கள் அங்குள்ள செய்தியாளர்கள்.

Karthikeyan N : வீட்டில அக்கா பையனுக்கு போன் போட்டு என்னடா பிரச்சனைன்னு கேட்ட?? முஸ்லீம்கள் ஒரு இந்துவை கொன்னுட்டாங்கன்னு சொன்னான் இன்னும் கொஞ்சம் அழுத்தி கேட்ட கொன்னதா சொல்லுறாங்கன்னு சொல்லுறான்.. சோ யாரு கொன்னனுதுன்னு தெரியாம தான் அங்க இப்போ அசாதாரண மா இருக்கு. இப்போ ஒரு ஜீப் இந்துமுன்னனியால எரிச்சி இருக்காங்க.. ரெண்டு போலிஸ் தாக்கபட்டு இருக்காங்க இப்போ கோவையில யாருக்கோ என்னமோ தேவையா இருக்கு அதான் போலிஸ்சும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கு.. ஒரு சாதாரண கொலைக்கு ஒரு நகரமே அசாதாரண சூழலில் இருக்குனா கண்டிப்பா வேற பெரிய காரணங்கள் இருக்கும் இருக்கு.

Rajasangeethan John: கோயம்புத்தூர் உறவினர் ஒருவரிடம் பேசினேன். நிலவரம் பதற்றமாகத்தான் உள்ளதாம். கடைகள், நிறுவனங்கள் அடைக்கப் பட்டிருக்கின்றன. காவிக்கும்பல் சாலைதோறும் அலைந்து கண்ணில் படுவதையெல்லாம் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறதாம். பள்ளிகளுக்கு விடுமுறை. வழக்கம்போல், காவல்துறையின் பாதுகாப்போடுதான் அனைத்து சேதங்களும் ஏற்படுத்தப்படுகிறது. ஊடகம் எதுவும் இந்த பிரச்சினயை கண்டுகொள்ளவில்லை என்று வருத்தப்பட்டார் உறவினர். நமக்குதான் ஜெயலலிதா குணம் அடைய வேண்டுமே!

Anbu Veera: கோவை இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் படுகொலையை காரணமாகக் கொண்டு இந்துத்வ பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ் , பிஜேபியினர் கடைகளை இழுத்துமூடும்படியும், பஸ்கள், ஆட்டோக்களை அடித்து நொறுக்கியும் பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழிசையோ இந்துமதவெறியர்கள் கொல்லப்பட்ட சங்க பரிவார நபர்களின் பட்டியலை போட்டு எங்கள் பிரமுகர்கள் மீது தொடர்ந்து இப்படி திட்டமிட்டு நடக்கிறது என்கிறார்.

இன்னும் யார் குற்றவாளி, என்ன காரணத்திற்காக என்ற தகவலே வெளிவராத நிலையில் இஸ்லாமிய மக்களை குறி வைத்து மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் திருப்பூரில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இங்கு குஜராத்தில் நடந்தது போல் நடக்கும் என மிரட்டலாக பேட்டியளிக்கிறான்.

ரியல் எஸ்டேட் தகராறு
பெண் விவகாரம்
கொடுக்கல், வாங்கல்
வட்டி பிரச்சனை
கட்ட பஞ்சாயத்து
இது போன்ற காரணங்களுக்காக தமிழகத்தில் இந்து மதவெறியர்கள் வழக்கமாக கொலை செய்யப்படுவார்கள். ஆனால், இந்த மதவெறி கும்பல்கள் இதை காரணமாகக் கொண்டு இங்கு மீண்டும் ஒரு கலவரத்தை நிகழ்த்த திட்டமிடுகின்றனர். இவர்களை மக்கள் மத்தியில் இன்னும் வீரியமாக அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் .

இந்துக்கள் என்ற பெயரில் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றும் இந்த பயங்கரவாத கும்பலை முறியடிக்க உழைக்கும் மக்களாக களமிறங்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.

Natarajan : கர்நாடகாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே இன்னும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வரவில்லையே; இந்த நிலையில் பெங்களூரில் வசிக்கிற, போன மாதம் குழந்தை பெற்ற மகளை ஊருக்கு அழைத்து வர என்ன வழியென்று தெரியாமல் முழிக்கிறார் நண்பர் ஒருவர். கர்நாடகாவும் தமிழ் நாடும் வேறு வேறு நாடுகளாக இருந்திருந்தால் இந்நேரம் போர் மூண்டிருக்குமோ என்னவோ!

கோவையில் இன்று அலுவலகம் போன கணவன் பத்திரமாகத் திரும்ப வருவாரா என்று மனைவியரும், வெளியில் போன மனைவி நல்லபடியாகத் திரும்ப வருவாரா என்று கணவன்மாரும் கவலையோடு இருக்கிறார்கள்.

சொல்லச் சொல்லக் கேட்காமல் ‘இன்டர்னல்ஸ் இருக்கு’ என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டியில் கல்லூரிக்குப் போன மகள் பத்திரமாக வீடு திரும்புவாளா என்று பக்கத்து வீட்டு அம்மா சோகத்தோடு இருக்கிறார்.

‘நாம சொன்னா எங்க கேக்கறான்; இன்னைக்கு வெளிய போகாதடான்னு சொல்லியும் கேக்காம பைக் எடுத்துட்டு வெளியில் போனவன் நல்லபடியாத் திரும்பணுமே’ என்று மகனை நினைத்து எதிர்வீட்டுப் பெண்மணி கவலைப் படுகிறார்.

இவர்கள் கவலைகளை எல்லாம் அதிகப்படுத்துகின்றன வாட்சப்பில் வரும் செய்திகள்.

நாடா இது? என்ன நடந்தாலும் வன்முறை; கல்வீச்சு! ச்சே!

நடந்தது அநியாயம்தான். அதற்கு கண்டனம் தெரிவியுங்கள். ஆர்ப்பாட்டம் நடத்துங்கள். அமைதியாக ஊர்வலம் கூடப் போங்கள். கொலையாளியைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தர போலீசை நம்புங்கள்.

பாக் எல்லையில் நடக்கும் தீவிரவாதத்துக்கு உணர்ச்சி பொங்கப் பேசும் அரசியல்வாதிகள் உள்நாட்டு வன்முறையைக் கட்டுப்படுத்தவும் ஏதாவது செய்யலாமே!

Livingston Wilfred: கோவையின் இன்றைய நாள்… கலவரத்தை மறுபடியும் தொடங்குகிறதோ என நினைக்க வைத்தது…

11 மணியளவில் பள்ளியிலிருந்து மகளை கூப்பிட போனேன். கோணியம்மன் கோயில் எதிரே வண்டி நிறுத்திவிட்டு பள்ளிக்குள் நுழையும் போது வின்சென்ட் ரோடில் இருந்து வந்த கும்பல் அஜ்மீர் பிரியாணி சந்துக்குள் நுழைந்து கல்லெறியை ஆரம்பித்தது…போலிஸ் வழுக்கட்டாயமாக இழுத்து வந்தனர். அடுத்து CBSC BOOK CENTRE அருகே மேல்தள கண்ணாடி நொறுக்கப்பட்டது., பின் TOWN HALL. வரை கல்லெறியுடனே சென்றது.. இடைபட்ட நேரத்தில்
பள்ளியின் உள்ளே சென்று மகளை அழைத்து School gate வந்து பார்த்தால் வெளியே வெறியாட்டம் நடக்கிறது… பள்ளி குழந்தைகளை அழைத்து செல்ல வந்த ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டது., ஒரு ஆட்டோ தலைகீழாக கவிழ்க்கபட்டது., இரு சக்கர வாகண கண்ணாடிகள் உடைக்கபட்டது… போலிஸாரின் கடும் முயற்சிக்கு பின் கும்பல் வின்சென்ட் ரோடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் செய்து எதிரே செட்டி ரோடில் நுழைய முயன்றனர். நான் மகளை அழைத்து கொண்டு வண்டியை நகர்த்தும் நேரம் Townhall லில் இருந்து 10 பேர் அடங்கிய கும்பல் கையில் நீண்ட கம்பி. கட்டை களுன் என்னை கடந்தனர். 11மணிக்கு சென்ற நான் 11 50 க்கு வீடு திரும்பினேன். தற்போது பஸ்கள் இயங்காததால் பள்ளி குழந்தைகள் , அலுவலகர்கள் நடந்து செல்கின்றனர். இந்த போராட்டத்தால் நஷ்டப்பட்டது பெரும்பாலும் இந்து மக்களின் கடைகளும் வாகனங்களுமே.

Yamuna Rajendran: ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ வெளிப்படுத்தும் மானுடப் பேரழிவு மறுபடி நிகழக் கூடாது..

நறுமுகை தேவி: தேவையே இல்லாமல் குனியமுத்தூர் மைல்கல்லில் இஸ்லாமிய நண்பர்களின் கடைகளைத் தாக்கி இருக்கிறார்கள். என் தோழியின் சொந்தக்காரர்கள் கடை அது.மூன்று பேரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்களாம்.பார்ப்போம்….

அமைதி காக்கும் இஸ்லாமிய நண்பர்களுக்கு நன்றி. எதிர்த்தாக்குதலை எதிர்பார்த்தே திட்டமிட்டு தூண்டப்பட்ட ஒரு கலவரத்தை அமைதி காப்பதன் மூலம் தீர்க்கலாம்.

Anbe Selvaஇவ்வளவு பதட்டத்தோடு இதற்க்கு முன் கோவையிலிருக்கும் உறவினர்களை விசாரித்து இருக்கிறீர்களா?.. இப்போது மட்டும் ஏன் என்று உணருங்கள்..

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது கூட வன்முறை வெடிக்காத ஊருடா.
இந்த மண்ணுல என்னைய ஊத்தி திரிய பொறுத்துறீங்களேடா இத்தன வாட்டி..

காந்தியவே இஸ்லாமிய பெயரை பச்சை குத்தி கொண்டு கொன்னவனுங்க.

ஒருத்தர் இறந்துட்டாரேன்னு கலவரம் பண்ண மாட்டானுங்க.
கலவரம் பண்றதுக்காகவே கொல்றவனுங்க..

தமிழ்நாட்டு கட்சிகளில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள், எப்போதாவது
பதட்டமாக உணர்ந்திருக்கிறீர்களா?..

காவிரிக்கு பம்மிக் கிடந்த பாஜக தலைவர்கள் எல்லாம்சீனுக்கு வந்திருப்பங்களே..

பாஜக ஆர்எஸ்எஸ்-ஐ விரட்டியடிக்க வில்லையென்றால் நீங்கள் இன்னும்
பதட்டத்துடனேயே இந்த மண்ணில் வாழ வேண்டியிருக்கும் மக்களே..

Villavan Ramadoss: தமிழகத்தின் காவி பொறுக்கிகள் தவிர்த்த எல்லா இயக்கங்களும் பந்த் நடத்தின, ஒரு அசம்பாவிதம் கிடையாது. இன்று இந்த பொறுக்கி கும்பல் மட்டும் பந்த் நடத்துகிறது, இரண்டு மாவட்டங்கள் தி்கிலடையும் நிலையில் இருக்கின்றது.

போலீசின் வீரமெல்லாம் ரோட்டு கடைக்காரர்களிடமும் மக்களுக்காக போராடுவோரிடமும் காட்ட மட்டுமே பயன்படும் போல…

சங்க பரிவார ரவுடி கும்பலுக்கு ஆதரவளித்ததற்கான விலையை கோவை ஏற்கனவே கொடுத்துவிட்டது. தொழில் இழப்பு, அமைதி இழப்பு என பல முனைகளில் அவர்கள் சிரமப்பட்டார்கள். கண்ட பலன் ரவுடிகளுக்கு பதவிகள் கிடைத்தது மட்டும்தான்.

இன்னுமொருமுறை கோவை வெறிநாய்களுக்கு சோறு போட்டால் அதற்கான விலை இன்னும் மோசமாக இருக்கும் என்பது நிச்சயம்.

கருப்பு கருணா: சற்று முன்னர் கோவையில் காவிக்கூட்டம் நடத்தும் அராஜகத்தின் வீடியோவை பார்த்தேன்.வெறியெடுத்து கடைகள்,ஆட்டோக்கள் வாகனங்களை நொறுக்கித்தள்ளுகிறார்கள்.

அவர்களுக்கு பாதுகாப்பாக உடன் போய்க்கொண்டிருக்கிறார்கள் போலீஸ்காரர்கள். அவர்களின் வெறிக்கூச்சலைவிட மிகவும் ஆபத்தானது இவர்களின் மெளனப்புன்னகை!

Jeeva Giridharan : இந்து முன்னணி நிர்வாகி சசி குமாரின் படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது. இப்படுகொலையை சாக்காக வைத்து மீண்டும் ஒரு “கோவை கலவரத்தை” அரங்கேற்ற முற்படும் காவிகளின் சதியை புரிந்து முஸ்லிம் சமுதாயம் கட்டுக் கோப்புடன், பொறுமையுடன் அமைதியினை கட்டிக் காப்பதுடன் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுகிறேன்…

Eniyan: மற்றுமொரு மௌனத்தின் சாட்சியங்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது கோவை. வெறிச்சோடியிருக்கும் சாலைகளின் இயல்புகள் காவிக் கும்பல்களால் பலியிட்டப் பட்டிருக்கிறது. பட்டுக்கொண்டிருக்கிறது.

காவிகளுக்காக கைகட்டி வேடிக்கை பார்க்கும் காக்கிகளின் வண்ணம் மாறினால்தான் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் மாற்றம் ஏற்படும் போல.

Kathir Vel: பொது சொத்துகளையும் அப்பாவிகளின் உடமைகளையும் சூறையாடும் கலவர கும்பலுக்கு பாதுகாப்பு! ஹேட்ஸ் ஆஃப் டு கோவை போலீஸ்.