கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொல்லப்பட்டதை அடுத்து பொது மக்கள் மீது இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் வன்முறையை கட்டவிழ்த்தனர். இதைக் கண்டித்து அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் ஒருங்கிணைந்து  கண்டன ஆர்ப்பாட்டத்தை சனிக்கிழமை நடத்தின. இதில் பெருந்திரளானவர்கள் திரண்டு, வன்முறையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.