மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் நலம்பெற்றுத் திரும்ப அரசியல் கட்சித் தலவர்கள் வைகோவும் மு. க. ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின்

<

div class=”mtm _5pco”>

உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் விரைவில் முழுமையாக குணம் அடைந்து, நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விரும்புகிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

<

div class=”text_exposed_show”>

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்ற செய்தி அறிந்து மிகுந்த கவலை ஏற்பட்டது. முதலமைச்சர் அவர்கள் முழுமையான உடல்நலம் பெற இயற்கை அன்னையின் அருளை வேண்டுகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழுமையான உடல்நலம் பெற்று அரசு பணிகளையும், அரசியல் பணிகளையும் தொடர வேண்டும் என்ற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ :

உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் அவர்கள் விரைவில் பூரண உடல் நலம் பெற்று மீண்டும் மக்கள் நலப் பணியாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.