காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில்,

“முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமான நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா வழக்கமான உணவுகளை உட்கொண்டார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடைய அதிமுக அமைச்சர்கள் பலர்  மருத்துவமனை வாசலில் காத்திருக்கின்றனர். தொண்டர்கள்  பலர் குவிந்துள்ளதால் காவல்துறையினர் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர்.