தமிழகம் தலித் ஆவணம் பத்தி

கண்ணகி நகர்: முள்வேளியில்லாத வதை முகாம்!

இசையரசு

isaiyarasu
இசையரசு

வழிப்பறி சம்பவம் தொடர்பாக, கடந்த 18.09.2016 அன்று மாலை மீன் கார்த்தி , அருணாச்சலம் என்ற இருவரை விசாரணைக்காக அழைத்து சென்றது கண்ணகிநகர் போலீஸ், இரண்டு நாட்கள் விசாரணை என்ற பெயரில் கண்ணகி நகர் போலீஸ் கடுமையாக தாக்கியதில், மீன் கார்த்தி 21.09.2016 அன்று மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதில் கார்த்திக்கோடு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அருணாசலத்தை காணவில்லை, மகனை மீட்டுத்தரவேண்டும் என அவரின் தாய் கவிதா சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையின்போது கண்ணகி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆஜராகி, அருணாச்சலம் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் ., அவரை தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்துள்ளோம் என்று கூறியிருக்கிறார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அய்யா நீதிபதி அவர்களே…

1.ஒருவரை கைது செய்தால் அவரின் உறவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அல்லது அவரின் வழக்கறிஞருக்கு சொல்ல வேண்டும் என்ற சட்ட விதி தலித்துக்களுக்கு கிடையாதா …?

  1. நீதி மன்றத்தில் முறையிட்டுத்தான் மகனை கண்டுபிடிக்க வேண்டும் என்ற பெரு பேரவல நிலைக்கு காரணம் , கார்த்திக்கும் , அருணாச்சலமும் என்ன I S இயக்க பயங்கரவாதிகளா..? அல்லது மசூதியை இடித்த தீவிரவாதிகளா …?

  2. ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் , இரவு காவல் நிலையத்தில் இரவு தங்க வைக்கக்கூடாது என்று சட்ட விதியிருக்கும்போது , இரண்டு நாள் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்யும் போலீசின் மனித உரிமை மீறலை கணம் கோர்ட்டர் ஏன் கேள்விக்கேட்ட வில்லை? தமிழ்நாடு காவல் துறையை ஏன் கண்டிக்கவில்லை ..? தலித் குற்றவாளிதானே அதெல்லாம் தேவையில்லை என்று (மநு) நீதி தேவதை சொல்லியதோ..?

4.சாதாரண செயின் பறிப்புக்கு, காக்க காக்க சூர்யா போல துள்ளும் ஜெயா போலீஸ், ஆயிரம் கோடிகள், இலட்சம் கோடிகள் கொள்ளையடித்த, வீடுகளை அபகரித்த எத்தனையோ கிரிமினல்களை ஏன் இப்படி விசாரிக்கவில்லை ..?

  1. மூன்று மாதத்துக்கு முன்புதான் முகேஷ் என்ற சிறுவனை, கண்ணகி நகரில் புகுந்து தூக்கி சென்ற, வேளச்சேரி போலீஸ், கடுமையாக தாக்கி, குற்றுயிரும் கொலை உயிருமாக ரோட்டில் வீசி சென்றது. கண்ணகி நகர் மக்களின் கடும் போராட்டமும், ஊடக வெளிச்சமும் பட்டதால் காவல் துறை குற்றவாளிகள் லேசாக தண்டிக்கப்பட்டார்கள். கண்ணகி நகர் என்பது சென்னையிலிரிருந்து இடம்பெயர்க்கப்பட்ட சேரி மக்களின் கூடாரமா..? இல்லை ஜெயா அரசு போலீசின் தடுப்பு முகமா ..?

இசையரசு, சமூக செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s