உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச்செயலளார் திங்கள்கிழமை வெளியிட்டார். இதில் சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட ஏழு மேயர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், வேலூர், கோவை, திருநெல்வேலி மேயர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. திண்டுக்கல் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், தற்போதைய மேயர் மருதராஜின் மகள் பொன். முத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம், மதுரை, திருச்சி, திருச்செங்கோடு மேயர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் முதல் மேயர் பதவிக்கு வருகிறவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.