உச்சநீதிமன்ற உத்தரவு‌ப்படி காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்காத கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், புதன்கிழமை முதல் 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக விவசாயிகள் தமிழகத்தை கண்டித்தும்,‌ உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், மண்டியாவில் போராட்டம் நடத்தினர். காவிரியில் தண்ணீர் திறக்க கூடாது என்று வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவிலும் போராட்டங்கள் நடைபெற தொடங்கி உள்ளன. இதேபோல் கர்நாடக காவிரிப் பாசனப் பகுதிகளில் போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன.

இந்த சூழல்நிலையில் கலவரங்கள்  நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் செவ்வாய்கிழமை முதல் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு வரை (மூன்று நாட்களுக்கு) 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.