தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக கடந்து வாரம் அப்பலோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீரடைந்துவருவதாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. புதன்கிழமை முதலமைச்சர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும்வகையில் மருத்துவர்கள், “முதலமைச்சர் நலமுடன் உள்ளார்; இன்னும் ஒருசில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புகிறவர்களை காவல்துறை கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளது.