பிரபல திரைப்பட பாடலாசிரியர்‌ அண்ணாமலை மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள‌ தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். திருவண்ணாமலையை சேர்ந்த இவர் வேட்டைக்காரன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் பாடல் எழுதியுள்ளார்.

என் உச்சி மண்டைல சுருங்குது… பன்னாரஸ் பட்டுக்கட்டி… என் பேரு முல்லா… உள்ளிட்ட பாடல்கள் இவருக்கு தனித்த அடையாளத்தைப் பெற்றுத்தந்தன. பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் மற்றும் எம்.பில். பட்டம் பெற்ற இவர், எழுத்தாளர் அழகிய சிங்கர் நடத்திய விருட்சம், ஆத்மாநாமின் ழ இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.