சுவாதி வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படும் நிலையில், அவரது பிரேதப் பரிசோதனையி‌ல் தனியார் மருத்துவர் ஒருவரை அனுமதிக்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரணை செய்ய வேண்டிய தேவையில்லை கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற‌ம், மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த 18-ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவரது உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.