வெளி தேடி காலம் மறுக்கையில்
புவி ஈர்ப்பை சமநிலைக்கும் உடல்கள்
உடல்கள் எரியப்பட்டு முளைத்தெழ
ஒத்ததிரும் குழியில்
சுழற்சியின் ஓர்மை, வட்டப்பாதை
ஆற்றல்கள் துரிதப்படும் குழியின் வரையறைக்குள்
இயக்கம் எதிரியக்கம்.
ஒருமிக்கிறது சுருள்….
காலம் குறியாக
அனைத்தும் கரைந்து
அச்சிழந்து ஈர்ப்புக்குள் மூழ்கும்
உடல்கள் நிலமாகின்றன

நடனக் கலைஞர் பிரீத்தீ ஆத்ரேயா குழுவினர் நிகழ்த்தும் நடன நாடகம் மதுரை அருள் ஆனந்தர் கல்லூரியில் நடைபெறுகிறது.

நிகழ்வு: 01-10-2016 (சனிக்கிழமை) மாலை:07:00 மணியளவில்

இடம்:அருள் ஆனந்தர் கல்லூரி,கருமாத்தூர், மதுரை.

தொடர்புக்கு :+91-9443698960 /+91-9940672857