‘பெண்களை பாதுகாப்போம்! பெண் உரிமையைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தோடு நடைப் பயணம் ஒன்றை ஒருங்கிணைத்திருக்கிறது மனிதி அமைப்பு. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட தகவலில்,

“கடந்த ஓராண்டில் தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பெண்களின் மீது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களைப் பார்க்கும் போது, பெண்களை மதிக்கவும், உண்மையாக அன்பு செலுத்தவும், சமமாக நினைக்கவும் தெரியாத ஒரு தலைமுறையையே இம்முதலாளித்துவ சமூகம் உருவாக்கியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சுவாதி, விஷ்ணுப்பிரியா, நவீனா, கலைச்செல்வி… என்று பட்டியல் நீண்டு செல்கிறது. இவர்களில் சிலர் கொலை செய்யப்பட்டனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறைகள், கொலைகள் மற்றும் தற்கொலைகளுக்குப் பின்னே சாதி உட்பட பல்வேறு காரணங்கள் இருப்பினும், பெண் என்பது பொதுவான காரணமாக இருப்பதை யாரும் மறுக்க இயலாது.

அதன் முதல் வேலைத்திட்டமாக ‘பெண்களை பாதுகாப்போம்! பெண் உரிமையைப் பாதுகாப்போம்! என்ற கோரிக்கைகளோடு விழிப்புணர்வு ‘நடைப்பயணம்’ ஒன்றை வரும் அக்டோபர் 1 ஆம் தேதியன்று மாலை 4 மணியளவில் மெரினாவில் (உழைப்பாளர் சிலை…காந்தி சிலை) நடைபெற உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.