ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான சமூக நீதிக்கான ஐக்கிய முன்னணி அனைத்து பதவிகளையும் வென்றுள்ளது. வலதுசாரி மாணவர் சங்கமான ஏபிவிபி (ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலா தற்கொலை பின்னணியில் இருந்த) ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை. அம்பேத்கர் மாணவர் சங்கம் கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

சமூக நீதிக்கான ஐக்கிய முன்னணியில், இந்திய மாணவர் சங்கம், தலித் மாணவர் சங்கம், பழங்குடி மாணவர் சங்கம், பகுஜன் மாணவர் முன்னணி, தெலுங்கான வித்யார்த்தி வேதிகே ஆகியவை இணைந்து போட்டியிட்டன. இவர்களே சங்கத்தின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக் கழக மாணவர் சங்க தலைவராக குல்தீப் சிங் நாகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

துணைத் தலைவராக புக்கியா சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொது செயலாளராக சுமன் தமேராவும் இணை பொது செயலாளராக பில்லி விஜய் குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கலாச்சார செயலாளர் நாக்ராய் டெபர்மாவும் விளையாட்டுத் துறை செயலாளராக உஸ்னீஸ் தாஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.