2016-ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறை நோபல் விருதைப் பெறுகிறார் ஜப்பானிய ஆய்வாளர் யோஷினாரி ஒசுமிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்களின் அடிப்படை செயல்பாடான மறுசுழற்சு மற்றும் தரமிழத்தல் அதாவது  செல்கள் தன்னைதானே அழித்துக்கொள்வது (mechanisms of autophagy)  குறித்த வழிமுறைகளைக் கண்டறிந்ததற்காக இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒசுமி, ஜப்பானின் யொகோஹாமா நகரில் அமைந்துள்ள டோக்கியோ இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாஜியில் பேராசிரியராக இருக்கிறார்.

நோபல் பரிசு குழு அறிக்கையில், “ஒசுமியின் ஆய்வு, செல்கள் வறிய சூழலை எப்படி கையாள்கின்றன என்றும் தொற்றுக்கு எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்றும் புதிய பாதையை உருவாக்கியுள்ளது.  செல்களின் தன்னைதானே அழித்துக்கொள்ளும் வழிமுறையைக் கட்டுப்படுத்தும் ஜீன்களில் ஏற்படும் பிறழ்வு கேன்சர், நரம்பியல் நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளை உண்டாக்குகின்றன என்பதையும் இவருடைய ஆய்வு வெளிக்கொண்டு வந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ நோபல் விருதுகளை ரெண்டு அல்லது மூன்று பேர் பகிர்ந்துகொண்ட நிலையில், இந்த ஆண்டு ஒசுமிக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.