காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

திங்கள்கிழமை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது” என்று தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த பதிலுக்கு சமூக ஊடகங்களில் தமிழக மக்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் ஸ்டுடியோ மோ. அருண்:

தமிழ்நாடு இன்னொரு பாகிஸ்தான் அல்ல.

தமிழகத்தில் என்றுமே ஆட்சிக்கு வர முடியாது என்கிற தெளிவான முடிவு பி.ஜே. பி அரசுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் கர்நாடகாவில் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த அதிகார அரசியலை மனதில் வைத்துதான், காவேரி மேலாண்மை விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. கர்னாடக மக்களுக்கு எதிராகத்தான் நாம் செயல்பட கூடாது. ஆனால் மத்திய அரசு என்பது ஒரு சமூகமோ, மக்களின் குழுவோ அல்ல. அது ஒரு அதிகார அமைப்பு, அதனை எதிர்த்து நமக்கு தேவையான நீதியை, தேவையை பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்து, மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் பி.ஜே.பி உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தன்னுடைய நியாயமான எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டை இன்னொரு பாக்கிஸ்தான் என்று பிரதமர் நினைத்திருப்பார் போல (இதன் உள்ளர்த்தம் பாகிஸ்தான் மீது போர்தொடுக்கலாம், அல்லது அவர்களை கொன்றொழிக்கலாம் என்பதல்ல, மத்திய அரசு செயல்படும் விதத்தை விவரிக்கவே இந்த சொற்பதம்), தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மாநிலம் என்று அவருக்கு யாராவது தெரிவித்தால் நல்லது. அல்லது தமிழ்நாட்டிற்கு ஒருமுறை பயணம் செய்ய சொல்லி வற்புறுத்த வேண்டும். தொடர்ச்சியாக தமிழ்நாட்டை மத்திய அரசுகள் வஞ்சிப்பது இறையாண்மைக்கு நல்லதல்ல.

எழுத்தாளர் சல்மா: 

தமிழ்நாட்டில் தங்கள் வெற்றிடம் உறுதி என்கிற நிலையில் காவிரி மேலாண்மை வாரிய எதிர்ப்பினை உறுதி செய்கிறது மோடி கும்பல். நான் அப்போவே சொல்லலை்அவர் வேற்று நாட்டு பிரதமர் னு….

எழுத்தாளர் விநாயக முருகன்:

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது.

—மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்

பாகிஸ்தான் போற தண்ணிய தமிழ்நாட்டுக்கு திருப்பி விட ஏதாவது பிளான் வச்சிருப்பாங்க. இதுக்குதான் மோடி பிரதமரா வரணும்.

சமூக-அரசியில் விமர்சகர் யோ. திருவள்ளுவர்:

தமிழகத்தின் அண்டைநாட்டுப் பிரதமர் சாகேப் மோடி அவர்களே,

உச்சநீதிமன்றம் தேவையில்லை என்கிற முடிவிற்கு எப்போது வருவீர்கள்?

அரசியல் செயல்பாட்டாளர் ரபீக் ராஜா:

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாதென, மத்திய அரசு, உச்ச நீதி மன்றத்தில் வாதம்.

#Indian_system_fails.

பத்திரிகையாளர் மலைமோகன்:

தமிழ்நாடு மீது இந்திய நாடு போர் தொடுக்க தொடங்கியிருக்கிறது.

அரசியல் செயல்பாட்டாளர் நல்லு ஆர். லிங்கம்:

உச்சநீதிமன்றத்துக்கே அதிகாரம் இல்லைன்னா, வேற எவன்தான்டா அந்த அதிகாரத்தைக் கையில வச்சிருக்கான்? அதையாவது சொல்லித் தொலைங்கடா…

பத்திரிகையாளர் உண்மைத் தமிழன்:

இப்பவாவது புரிஞ்சுக்குங்க மக்களே.. இந்த அரசியல்வியாதிகளுக்கு முக்கியம் தங்களுடைய சுயநலமே தவிர மக்களும், நாடும் அல்ல..

கர்நாடகாவில் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் பா.ஜ.க. மேலிடம், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறவும் முடிவு செய்துவிட்டது.

அந்த மீறலில் தமிழகத்துக்கு செய்யும் துரோகமும் அடங்கியிருக்கிறது. ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியாத தமிழகத்தைவிட ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ள கர்நாடகம்தான் நமக்கு முக்கியம் என்று நினைக்கும் இந்த மத்திய அரசு நமக்குத் தேவைதானா..? இந்தியாவும் தமிழகத்துக்கு தேவைதானா..? இதில் எங்கேயிருக்கிறது இந்திய ஒருமைப்பாடு..?

இந்தியா இந்து ராஜ்யமாம்.. கூப்பாடு போட்டு கத்தியவர்கள்தான் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள்..

தஞ்சையில் காவிரி தண்ணியை கேட்பவர்களெல்லாம் இந்துக்கள்தாண்டா பரதேசிகளா! உங்களுக்கு தமிழக இந்துக்களைவிடவும், கர்நாடக இந்துக்கள் முக்கியமாக தெரிகிறார்கள் என்றால் இதில் மதம் எங்கே இருக்கிறது..?

மதத்தை முன்னிறுத்தி தங்களுடைய அரசியலையும், அதிகாரத்தையும், சம்பாத்தியத்தையும் நடத்திக் கொள்ள விரும்புகிறார்கள் வெட்கங்கெட்ட ஜென்மங்கள்..! இதையாவது தமிழகத்து டவுசர் பாய்ஸ் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய எதிரிகள் இந்திய அரசியல்வியாதிகள்தான்.. வேறு யாருமில்லை..!

அரசியல் செயல்பாட்டாளர் வினோத் களிகை:

காற்றில் பரக்கும் போலி இந்தியக் கூட்டாட்சி, இந்திய தேசியம்

* * * * * * * * *

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு – உச்சநீதிமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சி – மோடி தலைமையிலான மத்திய அரசு வாதம்.

* * * * * * * * *

முதலில் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சனையில் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததால் தலையிட முடியாது என்று கர்நாடக வன்முறைக்கு தூபம் போட்டார் மோடி, இப்போது நேரடியாக தலையிடவே செய்துள்ளார்கள் – எதிர்மறையாக….

தமிழ்நாட்டு மக்களை இந்திய மக்களாக கருதவோ, தமிழ்நாட்டு இந்துக்களை இந்திய இந்துக்களாக கருதவோ உங்களுடைய போலி இந்திய கூட்டாட்சி, இந்திய – இந்து தேசியம் அனுமதிக்கவில்லை, அதை வெளிப்படையாக அறிவியுங்கள், பாகிஸ்தான் போன்று பகை நாடு என்ற பட்டத்துடனாவது சர்வதேச மன்றங்களில் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்கிறோம். நாமெல்லாம் இந்தியன், இந்து என்று ஏமாற்றி முதுகில் குத்தாதே…

* * * * * * * *

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். உறுப்பு அமைப்புகள் தான் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தண்ணீர் திறந்து விட வேண்டாம் என்று பா.ச.க. வலியுறுத்தியதும் அம்பலமான நிலையில்

இந்திய மக்களின் இறையான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை அமைக்க மறுப்பு தெரிவித்துள்ளது தமிழ்நாட்டுக்கு மட்டும் எதிரானது அல்ல, இன்று கர்நாடக ஆட்சி என்கிற சுயநலத்திற்காக இனப்பகையைத் தூண்டி விட்டு நதிநீர்ப் பங்கீட்டைத் தீர்க்காத ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் நாளை எந்த இன மக்களையும் ஆர்.எஸ்.எஸ். நலனுக்காகப் பலிகொடுக்க மாட்டார்களா?

* * * * * * * *

தமிழ்நாட்டின் வரி வேண்டும், தமிழ்நாட்டின் உரிமை மட்டும் உங்களுக்கு இரண்டாம் பட்சமா?

ஏன் தமிழ்நாட்டில் மத்திய அரசின் அலுவலகங்கள், பா.ச.க. – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் செயல்பட வேண்டும்?

இந்த கேள்விகள் சனநாயக அடிப்படையில் இயல்பாக எழுகின்றன…