மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது நாவல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான அருந்ததி ராய். 1997-ஆம் ஆண்டு சின்ன விஷயங்களின் கடவுள் (The God of Small Things) வெளியானது. மேன் புக்கர் பரிசு பெற்றது இந்த நாவல், அதிகம் விற்பனையாகும் நாவலாகவும் உள்ளது.

அருந்ததி ராய் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த நாவலின் பெயர் The Ministry of Utmost Happiness (மாமகிழ்ச்சியான அமைச்சகம் என மோலோட்டமான மொழிபெயர்ப்பில்) குறித்து பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். இந்த நாவலை பென்குயில் பதிப்பகம் பதிப்பிக்கிறது.

அருந்ததி ராயின் இலக்கிய முகவரான டேவிட் காட்வின், “அருந்ததியால் மட்டுமே இந்த நாவலை எழுத முடியும். இதை உருவாக்க 20 வருடங்கள் ஆனது, அந்த அளவுக்கு மதிப்பு மிக்கதுகூட” என்கிறார்.