மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட இரோம் ஷர்மிளா, கடந்த ஆகஸ்ட் மாதம் தன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அடுத்து அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்,

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை  கடந்த திங்கள்கிழமை சந்தித்து தேர்தல் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைக் கேட்டார் இரோம் ஷர்மிளா.

கெஜ்ரிவாலைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனைக் கேட்பீர்களா என்ற கேள்விக்கு, “ஒருவர் நண்பனாக இருந்தாலும் சரி, எதிரியாக இருந்தாலும் சரி, அவரிடம் நல்ல கருத்துகள் இருந்தால் அதை தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியால் தன்னுடைய கோரிக்கை(ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை)யை நிறைவேற்றி வைக்கும் அதிகார இருப்பதாகவும் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் முன்பும் ஒரு முறை பேசியிருந்தார் ஷர்மிளா.