தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து “அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு?” என்ற பெயரில் கவிதை வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கவிஞர் சினேகன். கவிஞரின் இந்த வீடியோவுக்கு சமூக ஊடகங்களில் பகடிகள் ஏராளமாக உருவாகிக்கொண்டிருக்கின்றன. சிலவற்றை இங்கே தருகிறோம்…

அறிவானந்தம் தமிழன்

உருகி கவிதை படிக்குறமாதிரிய முதல்வரை கலாய்த்த ஒரே ஆளு நம்ம கவிஞர் சினேகன் தான். என்னமா பீல்பண்ணி வாசிக்கிறாப்புள்ள.

டைனமிக் கல்யாணம் பண்ணி முடிச்சிட்டு அடுத்து இந்த சப்ஜெக்ட் இறங்கிட்டாப்புல.

#என்னமா_ஆச்சி_உங்களுக்கு (…ம்ம் உடம்பு முடியல ?)

திருச்சி சசிகுமார்

ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தன் கிளம்பி வந்து பீதிய கிளப்புறாய்ங்க… முன்பு ஹூசைனி இப்ப சினேகன்
#அம்மா_என்னம்மா_ஆச்சு_உங்களுக்கு

ராஜேஷ்குமார் வீரசேகர்

இதே சினேகன் ஒரு சினிமா விழாவில் விஜயகாந்தை அடுத்த முதல்வரே னு சொன்னது நினைவுக்கு வந்து தொலைக்குது..!!

# என்னாச்சுயா உனக்கு ?