எங்கிருந்து கிளம்பியது என்று தெரியவில்லை. ஆனால் “தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் அஜீத்” என்ற திடீர் குபீர் கட்டுரைகள் பரவலாக காண கிடைக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் அஜீத் என்றும் முதலமைச்சரின் தற்போதைய உடல்நிலையை கருத்தில் கொண்டு அஜீத்தை அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க முதலமைச்சரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதாகவும் எழுதப்பட்ட கட்டுரைகள் இறக்கை கட்டி வளம் வருகின்றன சமூக வலைதளங்களில்.

இந்த கட்டுரைகளினால் அலறி போயுள்ள சமூக வலைதளவாசிகள் தங்கள் கருத்துக்களை பதறி போய் பதிவிட்டுள்ளனர். அதிலிருந்து சில உங்கள் பார்வைக்காக.

Villavan Ramadoss

என்னது அடுத்த முதல்வர் அஜித்துன்னு ஒரு வதந்தியா?

ஐயகோ, வதந்தி முதல்வாராகக்கூட தமிழனுக்கு தகுதியில்லையா… தம்பி பல கண்ட தானைத்தலைவன் எங்கே? வடுக்கக்கூட்டத்தை வெல்லக் கிளம்பிய தமிழ் தேசிய தளபதிகள் எங்கே?

Rubini Rubi

அஜீத் தான் அடுத்த முதல்வர் – வதந்தி

இப்டிலாம் சொன்னா நாங்க கோவப்பட்டு விஜய்ண்ணா தான் அடுத்த முதல்வர்னு சொல்வோம்னு பாத்தீங்களா..😜😜😜சொல்ல மாட்டோமே 😃😃

 

Vasanthapriyan

தனக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?
நான் வெறும் நடிகன் மட்டுமே என
தன்னையும்,தன்னை
சுற்றியுள்ளவர்களையும்
தெளிவாகவும் வைத்து
இருப்பது #அஜீத் மட்டுமே
அவர விட்ருங்கப்பா பாவம்

 

அஜீத் என்னடா பாவம் பண்ணாரு உங்களுக்கு இப்படி கிளப்பி விடறீங்களே அடுத்தபடம் ரிலீஷ் ஆக வேணாம்ணு யாரோ பைரவா பேன்தான் கிளப்பி விட்டுருக்கான் போல

 

என் ( அஜீத்) படமும் வெளிவர முடியாமல் திணற.. சதித்திட்டம் தீட்டுறானுவ மா.. நம்பாதீக மா 😜😂

#TNCMAjithkumar

 

அதிமுகவில் அஜீத்? இந்த களேபரத்துக்கு நடுவுல இது வேறயா?

தன் உடம்பில் காயம் இருந்தாலும் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுபவர் தல அஜீத் !!

எங்களுக்கு அரசியல் வேண்டாம் ,,
#தலஅஜீத்தே_போதும் 😍

 

வருங்கால அமெரிக்க சனாதிபதி அஜீத்
Thala4cm