செய்திகள்

அத்தையை பார்க்க விரும்புகிறேன்; மருத்துவமனைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை: ஜெயலலிதா சகோதரர் மகள் வேதனை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமாரின் மகள்   தீபா, டைம்ஸ் ஆப் இந்தியா நாழிதழுக்கு  அளித்துள்ள பேட்டியில் “என்னுடைய மிக பிரியமான அத்தையின் கைகளை பிடித்து “உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நீங்கள் விரைவில் குணமடைந்து விடுவீர்கள்” என்று கூற விரும்புகிறேன்.  ஆனால், என்னைப் பார்க்க அனுமதிக்கவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Deepa_J.jpg

தனது அத்தையான ஜெயலலிதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விஷயத்தை பத்திரிகை வாயிலாகத்தான் தெரிந்து கொண்டதாகவும்,   தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவமனை வாயிலுக்கு சென்று , உள்ளே அனுமதிக்குமாறு  அனுமதி கேட்டபோது, அது தனக்கு மறுக்கப்பட்டதாகவும் தீபா வருத்தம் வெளியிட்டுள்ளார்.

“என்னுடயா அப்பா கடந்த 1995ஆம் ஆண்டில் இறந்தபோது எனது அத்தை எங்களது வீட்டுக்கு வந்திருந்தார். ஆனால், கடந்த 2012ஆம் ஆண்டில் எனது அம்மா விஜயலட்சுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, என்னால் எனது அத்தையை தொடர்பு கொள்ள முடியவில்லை.சிலர் எனது அத்தையை எங்களது சொந்த பந்தத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாகியும் அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை” என்றும் தீபா ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s