செய்திகள்

அரசாங்க மருத்துவமனை வேண்டாம்;பெஸ்ட் ட்ரீட்மெண்ட் வேண்டும் என்பவர்களே எங்கள் இலக்கு”:அப்பல்லோ பிறந்த கதை….

Kathir Vel

ஒரு டாக்டரின் கனவு

———————————-

க்ரீம்ஸ் ரோட்ல மண் மேடா கிடந்த இடத்துல செய்தியாளர் சந்திப்பு.

பெருசா ஆஸ்பத்திரி கட்ட போறதா அவர் சொன்னார். “வெளிநாட்ல இருந்து விலை உயர்ந்த கருவிகள் வரவழைப்போம். வெளிநாட்டு டாக்டர்களைக்கூட வந்து போக ஏற்பாடு செய்வோம்” என்றார்.

அப்ப பணக்காரங்களுக்கு மட்டுந்தான் உங்க ஆஸ்பிடல் பயன்படும், இல்லையா? என்றார் ஒரு நிருபர்.

ஓனர் முகத்தில் புன்னகை மங்கவில்லை. “ஆமாங்க. அரசாங்க ஆஸ்பத்திரி வேண்டாம்; என்ன செலவானாலும் சரி, பெஸ்ட் ட்ரீட்மெண்ட் வேணும்னு வர்றவங்கதான் எங்க இலக்கு” என்று ஓப்பனாக சொன்னார்.

நிருபர் விடவில்லை. “அட, அவங்கதான் பிளேன புடிச்சு லண்டன்லயோ நியூயார்க்லயோ போய் சிகிச்ச எடுத்துகிறாங்களே.. இங்க எதுக்கு வரணும்?” என்றார்.

ஓனர் புன்னகை விரிந்தது. “எக்சாக்ட்லி. பயண கட்டணம், நேர விரயம், மொழி பிரச்னை எதுவும் இல்லாம, அதே சிகிச்சைய அதே வெளிநாட்டு டாக்டர்களால குறைந்த செலவுல இங்க எடுத்துக்கலாம்னு நாங்க சொல்லுவோம்” என்றார்.

”இதுபோன்ற தனியார் ஆஸ்பத்திரிகள் வந்தால் வசதி படைத்தவர்கள் அங்கு வருவார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் நெருக்கடி குறையும். அதனால் அங்கு இன்னும் அதிக ஏழைகள் சிகிச்சை பெறலாம்” என்றும் கோட் சூட் அணிந்திருந்த ஓனர் மெல்லிய குரலில் விளக்கினார். நிருபர்கள் கேலியாக சிரித்தனர். அவர் கண்டுகொள்ளவில்லை.

கார்ப்பரேட் ஆஸ்பிடல் என்ற வார்த்தை 36 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த யாருக்கும் தெரியாது.

மின்சாரம் தடைபட்டது. ஒரு சீனியர் நிருபர் சொன்னார்: “ரெட்டிகாரு, நீங்க பெரிய ரிஸ்க் எடுக்குறீங்கனு தோணுது. நம்மூர் நிலைமைக்கு உங்க கான்செப்ட் சரிவருமானு தெரியல” என்றார்.

இருட்டில் பிரதாப் சி ரெட்டியின் முக பாவத்தை கவனிக்க முடியவில்லை. பல்வரிசை மெலிய கோடாக தெரிந்ததில் அவரது சூதாட்ட நம்பிக்கை பிரதிபலித்தது.

நிருபர்கள் சந்திப்பு முடிவுக்கு வந்தது. யாரும் ரெட்டியின் கனவு பற்றி பேசிக் கொள்ளவில்லை.

எனக்கு, இன்னும் உருவாகாத அந்த ஆஸ்பிடலின் பெயர் பிடித்திருந்தது. எதையோ தொட ஆசைப்படும் குழந்தையின் ஆசை அதில் தெரிந்தது.

You’ve come a long way, P C Reddy.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s