அக்டோபர் 6-ம் தேதி வெளியான DT Next நாளிதழில் “Water Wars: Cauvery issue a hot potato since 1910” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது.

கட்டுரையை எழுதிய கேரளத்தை சேர்ந்தவரும்,  DT Next நாளிதழின் City editor-ம் ஆன பிரதீப் தாமோதரன். “தமிழக விவசாயிகள், விவசாயத்தை விட்டு வேறு தொழில் பார்க்க செல்லலாம்” என்று அறிவுரை கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த கட்டுரையின் சர்ச்சைக்குரிய அந்த பகுதியை மட்டும் தமிழ்படுத்தியுள்ளோம்.

உண்மை என்னவென்றால், விவசாயம் லாபகரமான ஒரு தொழிலாக இருந்தது; ஆனால் தற்போது இல்லை; இன்று நிதானமான சரிவை சந்தித்து கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்குமென்றால், அல்லது  வாய்ப்பு அளிக்கப்படுமென்றால் ஒரு விவசாயி தன்னுடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தை கைவிடுவதற்கும், வேறு தொழிலில் ஈடுபடுவதற்கும் தயாராகவே இருக்கிறார். தண்ணீர் கிடைப்பது அல்லது கிடைக்காமலிருப்பது கூட அவருடைய முக்கிய பிரச்சனையாக இல்லை. குறைந்த கூலியில் தொழிலாளர்கள் கிடைக்காததும், விவசாய பொருட்களில் விலை உயர்வு மட்டுமே விவசாயிகளை பெரும் கவலை கொள்ள செய்கிறது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களுக்கு சென்றபோது, (இந்தக்கட்டுரையை எழுதியவருக்கு), அங்குள்ள விவசாயிகளுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தபோது  அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள் விவசாயம் செய்வதை விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். விவசாயம் என்பது கடினமான வேலை என்றும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிக கடினமாக இருப்பதாகவும் விவசாயிகள் அப்போது தெரிவித்துள்ளனர். சில விவசாயிகள் தங்களது நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டு, தங்களது குழந்தைகளின் மேற்படிப்புக்காகவும், சொகுசான வாழ்க்கையை மேற்கொள்வதற்காகவும் நகரங்களுக்கு சென்றதும் கட்டுரையாளர் தெரிந்து கொண்டிருக்கிறார். கிராமங்களில் மிஞ்சியுள்ள சிலருக்கும், நகரங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்காததாலேயே அங்கிருப்பதாகவும் கட்டுரையாளர் தெரிவிக்கிறார்.

ஆமாம், காவிரி டெல்டா படுகையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு காவிரி என்பதுதான் உயிர்நாடி. ஆனால், கடந்த பல வருடங்களாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண்மை என்னும் தொழில் மிக குறைந்த பங்களிப்பே அளிக்கிறது. விவசாயத்தில் ஈடுபடும் தனிப்பட்டவர்களுக்கும் மிக குறைந்த அளவிலான லாபங்களையே அளித்து வருகிறது.

 தமிழகம்,  அதன் விவசாயிகளுக்கு தண்ணீர் கேட்கும் வேளையில், கர்நாடகம்,  அதன் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான கூட இல்லை என்று கூறுகிறது.

மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நீர் தேவை இன்னும் தேவையாக இருக்கும்போது, தண்ணீரை மேம்படுத்தவோ அல்லது தண்ணீரின் பயன்பாட்டை முறைப்படுத்தவோ செய்யாதபோது, இரு மாநிலங்களுக்கிடையே மட்டுமல்ல சர்வதேச அளவில் கூட மோதல்கள் ஏற்படுவதுண்டு.

இது போன்ற சூழலில் சட்ட ரீதியான மோதல்களில் ஈடுபடுவதை விட, விவசாயத்தை நிலையான ஒன்றாகவும், திறமையான தொழிலாகவும் மாற்றும் பொருட்டு இரண்டடுக்கு திட்டங்களை முன்னெடுப்பதுடன்,  ஒன்றுடன் ஒன்று பிணைந்த இந்த உலகில், தொழிற்சாலைகள் மற்றும் சேவை துறைகளை கிராமங்களை நோக்கி நகர்த்த வேண்டும். இது போன்ற செயல்களே தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தரமான வாழ்க்கையை அளிப்பதுடன், நாட்டின்  மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரிக்கும்”.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் பிரதீப் தாமோதரன், தேனிக்கு சென்ற காலத்தில்,  அங்கிருந்த விவசாய பெருமக்களால் அடித்து விரட்டப்பட்டவர் என்று எழுதி இருக்கிறார் மூத்த பத்திரிக்கையாளரும், முல்லை பெரியாறு விவகாரங்களில் தீர்க்கமான பார்வை  கொண்ட எழுத்தாளருமான ராதிகா சுதாகர்.

முல்லைப்பெரியாற்று போராட்டம் தமிழகத்தில் கனண்று கொண்டிருந்த காலமது. அப்போது டெக்கன் கிரானிக்கள் என்ற ஒரு பத்திரிக்கையின் கோயமுத்தூர் பதிப்பில்  பணியாற்றிக் கொண்டிருந்தார்  பிரதீப் தாமோதரன் (மேனன்).

அதே நேரத்தில், மதுரையில் அதே பத்திரிகையில் ஒரு அக்மார்க் தமிழச்சிதான் மூத்த பொறுப்பில் பல ஆண்டு அனுபவத்துடன் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார். இவர் மதுரைக்காரரும் கூட. தென் தமிழகத்துடன் நல்ல பரிச்சயம் உள்ளவர். இதையெல்லாம் குறிப்பிடக் காரணம். மதுரைக்கு தேனி பக்கம் என்பதும். கோயமுத்தூர் அல்ல என்பதால்.

இப்படி இருக்கையில் முல்லைப்பெரியாறு போராட்டம் தென்தமிழகத்தில் வெடித்திருந்த வேளையில்,  அந்நாளிதழின் சென்னைத் தலைமையகம், அந்த கோயமுத்தூர் மலையாள செய்தியாளரை, முல்லைப்பெரியாறு போராட்டம் குறித்த செய்தி சேகரிக்க அனுப்புகிறது. மதுரையிலேயே இருந்த தமிழச்சியை ஒதுக்கிவிட்டு.

அதாவது அவர் ‘கேரளாவில் கேரளக்காரராகவும், தமிழகத்தில் தமிழராகவும் செய்தி கொடுப்பார்’ (!) என சொல்லப்பட்டு, இந்த பிரதீப் தாமோதர மேனன் அனுப்பப்படுகிறார்.

மலையாள செய்தியாளரும் முறையாகத் தேனி தமிழ்க்கூட பேச முயற்சி செய்துகொண்டே, மக்களிடம் கருத்து கேட்கிறார். ஆனால் என்ன சொன்னாரோ, ஏது கேட்டாரோ தெரியவில்லை….. தேனி ஊர் மக்களே சுற்றி வளைத்து சேர்ந்து அவரை அடித்து விரட்ட, இரவோடு இரவாக பழுத்த பதினோரு மணிக்கே கிடைத்த பேருந்தில் ஏறி கோயமுத்தூர் வந்து சேர்ந்தார். செய்தி கொடுக்கவில்லை.

இந்த வரலாற்று புகழ் மிக்க செய்தியாளர் சமீபமாக காணாமல் போயிருந்தார். ஆனால் தற்போது, தமிழர் தந்தை, தமிழர் படிக்க வேண்டும் என சி.பா. ஆதித்தனார் தொடங்கிய தினத்தந்தி நிறுவனம் வழங்கும் இலவச ஆங்கில இணைப்பு நாளிதழில் முதன்மை செய்தியாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் தமிழர்களுக்கு இன்று சொன்ன ‘அறிவுரை’ : “தமிழர்கள் விவசாயத்தை விட்டு மாற்று தொழில் தேட வேண்டும் ” என்பதே! எங்கேயோ கேட்டது போலவும் உள்ளதா? இந்து தீவிரவாதியின் குரல் போலும் உள்ளதா? இருக்கும் தான். தவிர இவர் நினைப்பது போல், வந்து போக விவசாயம் ஒன்றும் ‘பத்திரிக்கை தொழில்’ இல்லையே! சோத்துக்கும் மாற்று உண்டோ?

இதே விவகாரம் குறித்து சமூகவளைதள எழுத்தாளர் Сараванан Кумаресан எழுதியுள்ள ஸ்டேடஸ்ல் “தமிழக மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு, பிரதீப் தாமோதரன் என்ன ஆறாம் தம்பிரான் படத்தில் நடித்த மோகன்லாலா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Сараванан Кумаресан

Pradeep Damodaran சேட்டா, சேட்டனு கேரளத்திலு பணி கிட்டாத்தது கொண்டாணோ இவிட தமிழ்நாட்டில் வந்து பணியெடுக்குன்னது ? அங்கன பணியெடுக்காணெங்கில் தமிழ்நாட்டில விசேஷங்களக்க செரிக்கும் அறியணுமல்லோ சேட்டா ? வெறுதெ சென்னயிலு ஏசி ரூமிலு இருந்தோண்டு கட்டனும் கடியும் க‌டிச்சு இவிடத்த ஜனம் எந்தா செய்யணும்னு பறையான் சேட்டன் ஆரா, ஆறாம் தம்பிரான்ல மோகன்லாலோ ?

சேட்டன் ஒன்னு செய்யி அங்கோட்டு வாளையாரின்டே அப்புறத்துப் போய், அவிட எங்கன கிரிசியக்க செய்யணும்னின்னு சேட்டன் படிப்பிக்கி. இங்கோட்டு ஆ களி வேண்டா, இவிடத்த ஜனத்தினு அறியாம் எங்கன கிரிசி செய்யணும்மின்னு. இங்கோட்டு படிப்பிக்கான்சே ட்டன் கிரிசிக்காரன் ஒன்னும் அல்லல்லோ ?