இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் துப்பாக்கி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து வழிப்பட்ட படத்தை தனது முகநூலில் பதிவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை கிளப்பியதால் அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர், தடா.ஜெ. அப்துல் ரஹீம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.அந்தப் புகாரில் அர்ஜூன் சம்பத் வழிபாட்டின் போது பயன்படுத்திய துப்பாக்கி அரசு அனுமதி பெற்றதா என்று அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும். மேலும் இது போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட இந்திய சட்டத்தில் அனுமதி உள்ளதா என்றும் சட்டத்திற்கு புறம்பாக ஆயுதங்களை வைத்து வழிபட்ட அர்ஜூன் சம்பத் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

14572757_830166593765228_2845407373017162302_n

இதனிடையே இந்திய ராணுவத்தில் பணிபுரிபவரும், முகநூல் எழுத்தாளருமான  சதீஷ் செல்லதுரை எழுதியுள்ள பதிவில், அர்ஜூன் சம்பத் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் துப்பாக்கி ஒன்று, ராணுவம் , மாவோயிஸ்ட்கள் பயன்படுத்தும் துப்பாக்கி என்றும் அது எப்படி அர்ஜூன் சம்பத்திற்கு கிடைத்தாது என்றும் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Sathish Chelladurai

இதில் நடுவில் இருக்கும் துப்பாக்கி 7.62mm SLR எனப்படும் துப்பாக்கி ஆகும். இந்த ரைபிளை இந்தியாவில் காவல்துறை,ராணுவம், மாவோயிஸ்ட்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இந்தியக் குடிமகன் ஒருவனுக்கு முறையில் ஏர் கன் ,பிஸ்டல் மட்டுமே தனிப்பட்ட முறையில் வைக்க லைசென்ஸ் தரப்படுகிறது என என் சிற்றறிவு சொல்கிறது.

ஆனால் இந்த சந்து முண்ணனி ப்ரியாணி திருடர்கள் கையில் இது எளிதாக புழங்குகிறது என்றால் காவல்துறை என்ன செய்கிறது?/இதனை போடோஷாப் என ஒதுக்கும் அளவுக்கு இல்லாமல் இவ்னுங்க கேப்மாரித்தனம் செய்வதால் சந்தேகப்பட வேண்டியதாக உள்ளது. காவல் துறை கவனிக்குமா?