THE TIMES TAMIL

சமூகத்தின் பட்டகம்

இந்துத்துவம்

கருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்!

cow-urine

எகிப்திய அழகியாக வரலாற்றில் சொல்லப்படும் கிளியோபாட்ராவின் அழகைப் பெற, பசுவின் சிறுநீர், சாணம், பால், தயிர், மோர் சேர்ந்து உருவாக்கப்பட்ட ‘பஞ்சகவ்யா’வைப் பயன்படுத்தும்படி குஜராத் அரசின் பசு பாதுகாப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“பசுவின் சிறுநீர் கருவளையத்தை நீக்குவதோடு, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்களையும் நீக்கக்கூடியது. பஞ்சகவ்யா வைப் பயன்படுத்தினால் அழியாத அழகைப் பெறலாம்” எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இயற்கையான அழகு சாதனப் பொருட்களையே பயன்படுத்தும்படி பெண்களைக் கேட்டுள்ளது. பசு பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் வல்லபா கதிரியா, “பசும் பால், சிறுநீர், சாணம் ஆகியவற்றின் பலன்களை பெண்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். ரசாயனங்கள் சருமத்தை சீர்குலைக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.  பசுவின் சிறுநீரில் உள்ள பலன்கள் ‘மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டவை’ என்று சொல்லும் பசு ஆணையம், எய்ட்ஸ், ஆஸ்துமா உள்ளிட்ட 108 வியாதிகளை குணப்படுத்தக்கூடியது என்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: