கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள், எம்.எஸ். சுப்புலட்சுமி, எஸ்.டி சுப்புலட்சுமி இப்படி இவர்களில் ஆரம்பித்து அங்கமுத்து, சி.டி.ராஜகாந்தம் எனத் தொடர்ந்து, என்.சி.வசந்த கோகிலம், மனோரமா வரையான சினிமாப் பெண்களுடன் பயணிப்பதும் அவர்கள் வாழ்க்கையை உள்ளூர நாமும் வாழ்ந்து பார்ப்பதும் ஒரு ரசிகைக்கு மிகவும் சுகமான, அதே நேரம் கனமான விஷயமும் அனுபவமும் கூட. இந்தப் பெண்கள் வெறும் பொழுதுபோக்குப் பிம்பங்கள் மட்டுமல்ல.. ஒரு சமுதாயத்தின் ஒரு நூறு வருடக் கலாசார மதிப்பீடுகளைத் தூக்கி நிறுத்த அல்லது அடித்து நொறுக்க, மறு கட்டமைப்புச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள்.

– ரசிகை பார்வை நூலின் முன்னுரையில் பா. ஜீவசுந்தரி.

ரசிகை பார்வை – நூல் குறித்த உரையாடல் இன்று (14-10-2016 வெள்ளி) மாலை 6.00 மணி பரிசல் புத்தக நிலையத்தில் நடைபெறுகிறது. கலந்துரையாடலில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி, தமிழ் மகன், கே. என். சிவராமன், பிரேமா ரேவதி ஆகியோருடன் நூலாசிரியர் பா. ஜீவசுந்தரியும் பங்கேற்கிறார்.

இடம்: பரிசல் புத்தக நிலையம், 71-A, R.K. Mutt Road, Mylapore, Chennai- 600004.
தொடர்புக்கு: 9382853646
மின்னஞ்சல்: parisalbooks@gmail.com