செய்திகள்

விவசாயிகள் போராட்டத்துக்கு மக்கள் அதிகாரம் ஆதரவு

தமிழகத்தில் வரும் 17, 18-ஆம் தேதி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விவசாயிகள் நடத்தவிருக்கும் போராட்டத்துக்கு மக்கள் அதிகாரம் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.சி.ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் உயிராதாரமான காவிரி நதி நீர் உரிமையில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகும், அதை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய பி.ஜே.பி மோடி அரசாங்கம் நிராகரித்து விட்டது.

உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் விடமாட்டேன் என கர்நாடக காங்கிரஸ் அரசு அனைத்து கட்சிகளையும் கூட்டி அடாவடித்தனம் செய்கிறது., ஆர்.எஸ்.எஸ், பிஜே.பி. கர்நாடகத்தில் வன்முறை கலவரங்களை முன்னின்று நடத்துகின்றன. காவிரி நடுவர்மன்ற இடைக்காலத்தீர்ப்பு, இறுதித் தீர்ப்பை அமல் படுத்தாமல், சட்டவிரோதமாக அணைகளைக் கட்டி நீரைத்தேக்கி வருகிறது. காங்கிரசு, பிஜே.பி கட்சிகள் கர்நாடக வாக்கு அரசியல் லாபத்திற்காக, தமிழகத்திற்கு எதிராகவும் ஓரவஞ்சனையாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் வரும் 17,18 தேதிகளில் மத்திய அரசையும், கர்நாடகத்தை கண்டித்து அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தை ஆதரிக்கும் அதே வேளையில் காங்,பி.ஜே.பி கலந்து கொள்வதை எதிர்க்க வேண்டும்.

மக்கள் அதிகாரம் பிற கட்சிகள், விவசாய அமைப்புகளோடு காவிரி உரிமைக்காக தமிழகத்தில் பிரச்சாரம் போராட்டம் என தொடர்ந்து நடத்தி வருகிறோம். அது போல் இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கும் எங்களது அமைப்பின் சார்பில் ஆதரவை தெரிவித்து கொள்கிறோம்.

அதே சமயம் தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக நிற்கும் பா.ஜ.க. காங்கிரசு கட்சிகளோடு சேர்ந்து நிற்க முடியாது. துரோகத்தனமான, மக்கள் எதிரி கட்சிகளுடன் தோள் உரசி நின்று நமது உரிமைக்காக எப்படி போராட முடியும்?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s