சுயாதீன திரைப்படமான ‘கர்மா’வை இன்று மாலை (16-10-2016) 6 மணிக்கு திரையிடுகிறது தமிழ் ஸ்டுடியோ. இதுகுறித்து தமிழ் ஸ்டுடியோ வெளியிட்ட அறிக்கை:

நண்பர்களே, சுயாதீன திரைப்படங்களின் தேவையை தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திரையரங்க வெளியீடு அல்லாமல், வேறு வகையான வெளியீடுகளை பற்றி நாம் சிந்தித்தே ஆகவேண்டும் திரையரங்க வெளியீடுகள் பெரும்பாலும் சினிமாவை ஒரு வணிகப் பொருளாக மட்டுமே மாற்றி வைத்துள்ளது. அதனை உடைத்து சினிமா பெரும் கலையாக பரிமாணம் பெற சுயாதீன திரைப்படங்கள் அதிகம் வெளிவரவேண்டும். அவற்றுக்கு ஆகும் செலவுகளை வேறு வகையான வெளியீடுகள் மூலம் சரி செய்ய வேண்டும். அதன் முதல் கட்டமாக இயக்குனர் அரவிந்த் ஆர். இயக்கத்தில் வெளியான க்ரைம் த்ரில்லர் படமான கர்மா தமிழ் ஸ்டுடியோ மூலம் திரையிடப்படுகிறது. மிக குறைந்த கட்டணமாக ரூபாய் 50 நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது.

இந்த பணமும் கூட அரங்கு செலவுகளுக்காக மட்டுமே, மற்றபடி அதன் இயக்குனருக்கோ, தமிழ் ஸ்டுடியோவிற்கோ இதில் எள்ளளவும் லாபமில்லை. இது போன்ற நல்ல விடயங்களுக்கு நண்பர்கள் எப்போதும் ஆதரவளிக்க வேண்டும்.

50 ரூபாய் நன்கொடையை பியூர் சினிமா புத்தக அங்காடியில் செலுத்திவிட்டு ரசீது பெற்றுக்கொள்ளவும்.

முன்பதிவு செய்ய: 9566266036, 044 42164630

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

சிறப்பு விருந்தினர்: இயக்குனர் பாலாஜி சக்திவேல்