இந்துத்துவம்

ஈசா மையம் ஆக்கிரமித்திருக்கும் அரசு நிலத்தை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஈசா யோகாமையம் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருகிறது. சுமார் 44 ஏக்கரை இதுவரை ஈஷா யோகா மையம் ஆக்கிரத்திருக்கிறது. இந்த நிலத்தை நிலம் இல்லாத பழங்குடி மற்றும் தலித் மக்களை திரட்டி நவம்பர் முதல்வாரத்தில்  கைப்பற்றும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

ஞாயிறு அன்று முள்ளாங்காடு மற்றும் முட்டத்துவயல் ஆகிய பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் பங்கேற்ற சிறப்பு மக்கள் சந்திப்பு கூட்டம் முட்டத்துவயல் குளத்தேரி பகுதியில் ப.முத்தம்மாள் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்று பழங்குடியின மக்களிடையே உரையாற்றினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் பேசுகையில்,
ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக அரசின் உபரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசிற்கு எதிரான இந்த செயலை வருவாய்த்துறை அதிகாரிகள் தடுக்காமல் இருப்பதற்கு அரசு அதிகாரிகளும் ஈஷா மையத்ததுடன் கூட்டு வைத்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த  44 ஏக்கர் உபரி நிலத்தை மீட்டு ஏற்கனவே நிலம் கேட்டு மனு அளித்துள்ள மலைவாசி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் இடத்தை அளந்து பிரித்து வழங்க வேண்டும். மேலும், பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்கவில்லை எனில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அந்த 44 ஏக்கர்  நிலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆதிவாசி மக்கள் குடும்பத்துடன் சென்று  கைப்பற்றும் போராட்டம் நடத்தி விவசாயம் செய்வோம் என்றார்.

சமூக ஆர்வலர் கைதுக்கு கண்டனம்

மேலும், பழங்குடி மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இயங்கி வந்த சமூக ஆர்வலர் சிவக்குமார் மீது ஈசா மையத்தின் தூண்டுதலாலும், ஆளும் கட்சியின் நிர்ப்பந்தத்தாலும்  ஆதிவாசி பெண் ஒருவர் அளித்த பொய்  புகாரின் பேரில் வழக்கு போடப்பட்டு இருப்பதாக  அவர் குற்றம்சாட்டினார் . பொய்வழக்கு போட்ட கோவை  மாவட்ட காவல்துறையை கண்டித்தும் , ஈசா மையத்திற்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகளை  கண்டித்தும் வரும் 21ம் தேதி அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து  ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும்  சண்முகம் தெரிவித்தார்.

முன்னதாக இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பழங்குடியினப் பெண் முத்தம்மாள் கூறுகையில், ‘ஈசா மையம் மலைவாழ் மக்களை தொடர்ந்து அச்சுறுத்துகிறது. எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக சமூக ஆர்வலர் சிவா மீது ஈசா மையத்தின் தூண்டுதலால் எங்கள் பழங்குடியினத்தை சேர்ந்தவரை கொண்டே பொய் வழக்கு போட்டு இருக்கின்றனர். இந்த நிலத்தை மீட்கும்வரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் கோவை மாவட்ட செயலாளர் வி.பி.இளங்கோவன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.சந்திரசேகரன், சி.பெருமாள், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, வி.ச.ஒன்றிய செயலாளர் எ.காளப்பன், ஒன்றிய தலைவர் என்.ஆறுச்சாமி மற்றும் கே.ராமசாமி, வழக்கறிஞர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினர். இதில் ஏராளமான பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

நன்றி: தீக்கதிர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s