அர்ஷாத் கான், பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தின் ஞாயிறு சந்தை எனப்படும் இத்வார் பாஜாரில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராகப் பணிபுரிகிறார் 18 வயதான அர்ஷாத் கான். ஜியா அலி என்ற ஒளிப்படக் கலைஞர் அர்ஷாத் கானை படமெடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர டீக்கடை மஸ்டர், மாடலாகியிருக்கிறார். எல்லாம் சமூக ஊடகங்கள் செய்த மாயாஜாலம்!

அர்ஷாத் கானின் நீல நிற கண்களும் வசீகரிக்கும் பார்வையும் பாகிஸ்தானின் சமூக ஊடக மக்களைக் கவர #ChaiWala என்ற ஹேஷ் டேக் உடன் ட்ரெண்ட் ஆக்கினார்கள். இது இந்தியர்களையும் தொற்றிக்கொண்டது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மறந்து டீ மாஸ்டர் குறித்துதான் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது fitin.pk என்ற ஆன்லைன் ஆடை நிறுவனத்தின் விளம்பர மாடலாக ஒப்பந்தமாகியிருக்கிறார். படங்களில் நடிக்க விருப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார் அர்ஷாத்.