பத்திரிகையாளர் சமஸ், தி இந்து தமிழ் நாளிதழில் எழுதிய “காவிரியில் நமக்கு உரிமைகளை பேச தகுதி இருக்கிறதா” என்ற கட்டுரைக்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி எழுதியுள்ள எதிர்வினை இங்கே: 

“காவிரியில் நமக்கு உரிமைகளை பேச தகுதி இருக்கிறதா” என்கிற கேள்வியோடு பொறுக்கித்தனத்தினை ‘தி இந்து’ கட்டுரை எழுதி இருக்கிறது.

‘தி இந்து’ எனும் ஆரிய இனவெறி- சனதானியிடம் சம்பளம் வாங்கி பிழைப்பு நடத்துபவர்களுக்கும், ‘ராஜபக்சேவிடம்’ சம்பளம் வாங்கி தமிழன் தலையில் சுடுபவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதில் இருந்தே விவாதத்தினை துவக்க வேண்டும்.

தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் நாம் சமபலத்தில் எதிர்க்கிறோம் எனில், ‘தி இந்து’ போன்ற பொறுக்கிகள் , தமிழர் தரப்பினை பாசிஸ்டுகளாக எழுதும், இல்லையெனில் ‘ஃப்ரிஞ்ச் குரூப்’ என தலையங்கம் எழுதும். தமிழர்களுக்கான பக்கத்தில் நீதி இருப்பது பட்டவர்த்தனமாக தெரியுமிடத்தில், தமிழர்கள் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும், இல்லையெனில் நரித்தனமான கட்டுரைகளை எழுதும்.

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் ‘ராமசாமி’ எனும் உயர்சாதிதிமிரெடுத்தவருடைய கட்டுரையை தொடர்ந்து வெளியிட்டது. தமிழர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து எழுதும் கட்டுரைகள் அவை. இதே போல மீன்பிடி உரிமை, கச்சத்தீவு, ஆந்திரப்படுகொலையில் தமிழக உழைப்பாளிகள் பணத்திற்கு ஆசைப்படுபவர்கள் என எழுதியது. இந்த பட்டியல் நீளமானது.

காவிரிக்கான ரயில் மறியல் போராட்டத்தினை எந்த ஆங்கில பத்திரிக்கையும் எழுதவில்லை. வழக்கம் போல தி இந்துவிற்கு இதை எழுதும் விருப்பமும் இல்லை.

ராவணலீலா நடத்தும் தினத்தில் ‘தி இந்துவின்’ முதல் பக்கத்தில் “அரக்க அரசன்” எனும் (demon king) என்று ராவணனின் எரியூட்டப்படும் படத்தினை வெளியிட்டு தனது ஆரிய திமிரை வெளிப்படுத்தியது.

கர்நாடகாவில் தமிழர்களை தாக்கும் பொறுக்கிகளை “ஆக்டிவிஸ்டுகள் – போராளிகள்” என்று தான் குறிப்பிடுகிறது. அங்கே அரசியலுக்காக அரசியல்வாதிகள் செய்யும் அயோக்கியத்தனத்தினைப் பற்றி ஒரு வரிகூட வெளிப்படவில்லை. தமிழர்கள் தாக்கப்பட்டதை குறைத்து எழுதி தமிழின விரோதத்தினை வெளிப்படுத்தியது.

இதே வழியில் இப்போது ஒரு பொறுக்கித் தனமான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தின் நிர் நிலைகள் மேம்பாடு குறித்து அக்கரையோடு பேசுவது வேறு, அதை முன்வைத்து உரிமைகளை மறுப்பதற்கான வாதங்களை முன்வைத்திருக்கிறது ‘தி இந்து’ எனும் பொறுக்கி.

அதில் சமஸ் எனும் ‘தி இந்துவின்’ அடியாள் (கூலிக்கு எழுதுபவர்கள் அடியாள் தானே) எழுதியது….. “பாரம்பரிய நதிநீர் உரிமை, சட்டங்களையெல்லாம் தாண்டி கொஞ்சம் நமக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். காலத்தே வளர்ச்சியில் பின்தங்கிய ஒரு மாநிலம் பின்னாளில் தன் வளர்ச்சியை நோக்கி அடுத்தடுத்த அடிகளை எடுத்துவைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? காலத்தே யார் முன்னேறியவர்களோ அவர்களுக்கான முன்னுரிமை என்றும் தொடர வேண்டும் என்ற நியாயத்தைத் தமிழகம் போன்ற ஒரு சமூகநீதி மாநிலம் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பேச முடியும்?…”

எந்த அவசியத்திற்கு எம் உரிமையை விட்டுத்தர வேண்டுமென்கிறது ‘தி இந்து’?

’தி இந்துவில்’ வெளியாகும் விளம்பரத்தின் வருமானத்தினை வைத்து அந்த பத்திரிக்கையை ‘இலவசமாக’ விநீயோகம் செய்ய முடியும், வெளிநாடுகளில் இது நடக்கிறது. அதைப் போல செய்துவிட்டு பின்னர் இந்த உரிமையை விட்டுக்கொடுப்பதைப் பேசலாம். ‘தி இந்துவினை’ விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு , ‘ டைம்ஸ் ஆஃப் இந்தியா’ சென்னையில் நுழைந்து அவர்களுக்கான நிதியை உயர்த்திக் கொடுத்த பின்னரே’ ஐம்பது’ பைசா ‘தி இந்து’ ராம் மாமா ஏற்றினார். இவரைத் தான் சிபிஎம்மின் ஆதரவாளர் என்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘தி இந்துவில்’ நட்ந்த தொழிலாளர் போராட்டங்கள் இன்றும் நினைவில் இருக்கிறது.

இந்த யோக்கியதையை வைத்துக் கொண்டு , தமிழர்கள் தண்ணீர் கேட்பதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா எனக் கேட்கிறது ஒரு பொறுக்கி பத்திரிக்கை.

தமிழகத்திற்கான தண்ணீரை திருடி கர்நாடாக ‘பெப்ஸிக்கும், கோக்கிற்கும், பெரு நிறுவனங்களுக்கும்’ விற்கிறது. கர்நாடகத்தில் தண்ணீரை அமெரிக்காவின் பெரு நிறுவனத்திற்கு விற்பதற்கு ‘சித்தாராமய்யா’ ஒப்பந்தம் போட்டிருக்கிறார். மைசூரில் அனல்மின் நிலையம் அமைத்து அதற்கு 70 டி.எம்.சி கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதைவிட கர்நாட்க அணைகளின் தண்ணீர் சேமிப்பு அளவு 700 டி,எம்சி. மக்கள் தொகை 6.5 கோடி. இதில் காவிரியின் பங்கு 100 டி,எம்.சி அளவுக்கும் சற்று அதிகம்.
ஆனால் தமிழகத்தின் அணைகளின் தண்ணீர் சேமிப்பு 190 டி.எம்சி. இதில் காவிரியிலிருந்து வரும் சேமிப்பு அளவு 120 டி.எம்சி. அதாவது கிட்டதட்ட 70% காவிரியில் இருந்து மட்டும் வருகிறது. அதாவது தமிழகம் காவிரியை நம்பியே இருக்கிறது, வாழ்கிறது. இந்த 190 டி.எம்சியைக் கொண்டு 8 கோடி தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கிறார்கள்.

பத்திரிக்கையாளர்கள் கட்டுரை எழுதுவதாலேயே அவையெல்லாம் மக்கள் நலன் சார்ந்த கட்டுர்கள் அல்ல. மக்கள் நலன் சார்ந்து இயங்குபவர்கள் ‘சம்பளம்’ பெற்று கட்டுரைகள் எழுதுவதும் இல்லை. பொறுப்போடு எழுதுவது நல்லது.. பொறுக்கிக்களின் காலை நக்கி பிழைப்பதைக் காட்டிலும் சம்பளத்திற்கு ‘வேறு சில சிறப்பான பணிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதை செய்ய சிந்தியுங்கள்.

மீண்டும் சொல்கிறோம்.

’ தி இந்துவில்’ கட்டுரை எழுதி தமிழ்ச் சமூகத்திற்கு தொண்டு செய்வதாகவோ, செய்தி சொல்வதாகவோ நினைக்கும் சக தோழமைகள் சற்று சிந்திக்க வேண்டும். உங்களது கட்டுரைகளை வெளியிட்டு அதன் மூலம் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு, அடியாட்களை வைத்து பொதுமக்களுக்கு எதிரான கட்டுரைகளை இதன் நடுவில் வெளியிட்டு தனது பொறுக்கித் தனத்தினை செய்கிறது. உங்களது கட்டுரைகளின் மூலமாகவே தனது யோக்கியத்தனத்தினை வளர்த்துக் கொள்கிறது. நீங்கள் புறக்கனிக்கும் பட்சத்தில் ‘ தி இந்து தமிழில் எழுத தன்னுடைய ஆங்கில கட்டுரைகளார்களை நாட வேண்டும். அதில் பெரும்பாலும் தமிழின விரோதிகள் அப்பட்டமாக எழுதுவார்கள்.அதை தமிழில் வெளியிட இயலாத காரணத்தினாலேயே உங்களை எழுது அழைக்கிறது. அதன் பின்னர் இது போன்ற கட்டுரைகளை வெளியிடுகிறது.

பெரியார் தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல தன் சொந்த உழைப்பின் மூலமே செயல்பட்டார். ஆரிய பார்ப்பன வெறியர்களின் உதவியை என்றுமே நாடியதில்லை.

‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம். நம் கையில் ஒட்டியிருக்கும் ‘மலம்’.