ஆளுநரை இனி “மாண்புமிகு ஆளுநர்’ எனக் குறிப்பிட வேண்டும் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

“விழாக்கள், அரசு தொடர்பான பணிகள், பிற தகவல் தொடர்புகளில் குறிப்பிடும்போதும் தமிழக ஆளுநரை “மேதகு ஆளுநர்’ எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக இனி “மாண்புமிகு ஆளுநர்’ என்றே குறிப்பிட வேண்டும். அதேநேரம், வெளிநாட்டு பிரமுகர்களுடனான நிகழ்வுகளில் மட்டும் “மேதகு ஆளுநர்’ என்ற சொல்லை பயன்படுத்தலாம் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.