பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் சர்ச்சை விரும்பியுமான சுப்ரமணியன் சுவாமி, தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து எழுதியுள்ளார். அதில், “ஜெயலலிதா பக்தர்கள் மகிழ்ச்சி அடையலாம். ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பி விட்டதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனில், இது ஒரு அதிசயம் தான்!” என எழுதியிருக்கிறார்.