போபால் மத்திய சிறையில் உள்ள சிறப்பு சிறைச்சாலையில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பு எனப்படும் சிமி இயக்கத்தினர் (Students of Islamic Movement of India ) 8 பேர் இன்று அதிகாலை 4 மணிக்குள் தப்பிக்க முயற்சித்ததாகவும் இதனை தலைமை சிறை பாதுகாவலர் தடுக்க முயற்சித்ததால் அவரை தப்பியோடியவர்கள் கொன்றுவிட்டு தப்பியோடியதாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில் தப்பியோடிய சிமி அமைப்பினர் போபால் புறநகரில் சுட்டுக் கொன்றனர்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜயசிங் இந்த சம்பவத்தின் பின்னால் ஆர் எஸ் எஸ் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், நாடுமுழுவதும் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செலுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு முக்கியமான பிரச்னை. முதலில் கந்தவா சிறையில் இருந்து சிமி தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர். இப்போது போபால் சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்திற்கு பின்னல் ஆர்.எஸ்.எஸ். அல்லது அவற்றோடு தொடர்புடைய சில அமைப்புக்ளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.