“13 ஆண்டுகால வாழ்க்கைப் பிறகு நானும் திரு. கமல்ஹாசனும் பிரிகிறோம்” என நடிகர் கௌதமி தன்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இது சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் பொருளாகியுள்ளது.

சமூக ஊடக மக்கள் பகிர்ந்துகொண்ட சில முக்கியமான கருத்துகள், விவாதங்கள் இங்கே:

“13 வருடங்கள் லிவிங் டுகதரில் வாழ்ந்தது உன்மையில் இந்திய சூழலில் ஒரு சாதனைதான்.

அதைவிட, நான் பிரிகிறேன் என்று ரொம்ப மெஜஸ்டிக்கா சொல்ற கவுதமியின் பேராண்மை (இது சரியான வார்த்தை சொல்லவும்)பாராட்டுக்குரியது. இந்த பிரிவினால் ஏற்படும் வலியைத் தாங்கும் பக்குவம் உங்களுக்கு இருக்கும் கவுதமி. ஐ லவ் யுவர் மெஜஸ்டிக்னெஸ் கவுதமி!”  எழுத்தாளரும் ஊடகவியலாளருமான நாச்சியாள் சுகந்தி சொன்ன கருத்து.

“இந்திய குடும்ப அமைப்புகளில் இது போன்று லிவிங் டூ கெதர் செட்டப் செட்டாகுது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்..

என்னதான் படித்தவர்களாக இருந்தாலும், பணக்காரர்களாக இருந்தாலும் தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்பதை போல பெற்ற பிள்ளைகள் போல் வந்து சேர்ந்த பிள்ளைகளையோ, போகும் இடத்தில் இருக்கும் பிள்ளைகளையோ பார்த்துக் கொள்ள முடியாது. அவர்களிடத்தில் முழுமையான நட்பையும், அன்பையும் எதிர்பார்க்கவும் முடியாது..!

என்றாவது ஒரு நாள் ஒரு வார்த்தை.. ஒரு சொல்.. ஒரு பேச்சு போதும்.. எல்லாத்தையும் மூட்டை கட்ட..! கட்டியாகிவிட்டது..!” என்ற ஊடகவியாளர் சரவணன் சவடமுத்துவின் நிலைத்தகவலுக்கு ஆர். பிரபாகர் இட்ட கருத்து..

இதற்கு முன்பு கமல் தாலி கட்டிதான் கல்யாணம் செய்திருந்தார். அது மட்டும் செட்டாயிற்றா? காதலோ லிவிங் டுகதரோ கல்யாணமோ இதில் விசயமில்லை. இனி ஆணும் பெண்ணும் என்றென்றைக்குமாக சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கிறது.. இனி இப்படி நிறைய நடக்கும்.”

கௌதமி-கமலுக்கு வாழ்த்து சொல்கிறார் சாம் நாதன்:

“விதிகளுக்கு அப்பாற்பட்டு சேர்ந்து வாழ்தல் என்பதற்கு சாட்சியாக இருந்தவர்கள் நீங்கள். தசைகள் சுருங்கும் காலத்தில் நிபந்தனையற்ற அன்போடு கூடிக் கலப்பது வரம். உங்களுக்கு அமைந்தது. அன்பு குறையும்போது சரி செய்வதற்கான வழிகளைத் தேடலாம். அன்பேயில்லாத பாசாங்கில் ஒரு நிமிடம் கூடத் தங்கக் கூடாது. கவர்மெண்ட் ஊழியன்போல வேலையும் காலந்தள்ள ஒரு பெண்ணும் போதும் – வாழ்ந்துவிடலாம் என்பது மனித இனத்திற்கே விரோதமானது.

வருங்காலங்களிலும் அன்பு தழைக்க வாழ்ந்து அறம் காக்க வாழ்த்துக்கள். Love தலைவா & கவுதமி”

இயக்குநரும் எழுத்தாளருமான சந்திராவின் கருத்து:

“சுயமரியாதைக்கும் அதீதமான காதல் உணர்வுக்கும் இடையே பிரிவு என்ற ஒரு முடிவை எடுப்பது எதையும்விட துயரமானதுதான்.”

விமர்சகர் தீபா லட்சுமியின் கருத்து: கவுதமியின் கடிதத்திலிருந்த கண்ணியமும் கம்பீரமும் மனதைத் தொட்டது. கமலைப் பற்றிய புகழ்ச்சி கொஞ்சம் அதிகம் போல் தோன்றினாலும், அந்தப்பெருந்தன்மை அவலின்றி மெல்லும் வெறும் வாய்களைக் கொஞ்சம் மூட உதவும்.

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் கருத்து: கௌதமி ஒரு ஸ்டேட்மென்ட் விட்டிருக்காங்க. இது பிரபலமானவங்களுக்கு இருக்குற டிராஜடி. மத்தபடி இது ஒரு வெகு சாதாரணமான நிகழ்வு. இந்த ஸடேட்மென்டுக்கான காரணம் கூட லீகல் அளவுல, அநாவசிய ஊகங்கள் என்கிற அளவுல, அவங்க ஸ்டேட்டசை க்ளியர் பண்ணிக்கறதுதான். அவங்க ஸ்டேட்மென்ட்ல எந்த அநாவசிய சென்டிமென்ட்டும் இல்லை. டிபரன்ஸ் ஆப் பிரையாரிட்டிஸ். இத யாரும் ரெஸ்பெக்ட் பண்ணனும். யாரு மேலயும் குற்றம் சாட்ட ஒண்ணும் இல்ல. இதுல அழுவறதுக்கு ஒண்ணுமேயில்லை.

மனநலமருத்துவர் ருத்ரன் கருத்து: living together for convenience and living together with conviction தெரியாமல் பேசுவோர் பலர். புத்தகம் படித்து விட்டுப் பேசுபவனல்ல நான், அனுபவத்தில் பேசுபவன்.

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கருத்து: சில இணையர்களின் பிரிவு தான் நமக்கும் பெரும் சங்கடத்தை கொடுக்கும். அப்படி தான் கௌதமி-கமலின் இன்றைய பிரிவு அறிவிப்பு ஏதோ செய்கிறது மனதை. அவர்களிருவரும் 13 ஆண்டுகளாக கம்பீரமாக அழகாக சேர்ந்து வாழ்ந்ததும், இன்று பிரிவதாக அறிவித்திருப்பதும் தமிழ் சூழலில் நல்ல முன்நகர்வு தான்.

இந்த பிரிவு ஏன் எதற்கு என்கிற மூன்றாம் தர ஆய்வுகளுக்குள் இறங்காமல் இருவரின் தனிபட்ட உணர்வையும் முடிவையும் வலியையும் மதிப்போமாக.

மதிப்பிற்குரிய கௌதமி அவர்களின் மனஉறுதி இன்னும் அதிகமாகும் என்கிற நம்பிக்கையில், அவர் வாழ்வின் அடுத்த கட்ட நகர்விற்கு என் வாழ்த்துகளையும் அன்பையும் உரித்தாக்குகிறேன்.

ஊடகவியலாளர் செந்தில் குமார்: கமலும் கவுதமியும் சொல்லிவிட்டா சேர்ந்தார்கள் … ஏன் இப்போது சொல்லிவிட்டு பிரிக்கிறார்க ள்… ஒருவேளை மீடியாவின் மூலம் இருவரும் தங்களுக்கு vacancy போர்ட் மாட்டிக்கொல்கிறார்களா …

களப்பணியாளர் ஜோஷ்வா ஐசக் ஆசாத்:

இன்று நாம் பார்க்கும் ‘ப்ரைவசி’ ‘தனிநபர் விஷயம்’ ‘பர்சனல் இஷ்யூ’ போன்ற வாதங்கள், அறிவுரைகள் எல்லாம் ‘கமல்ஹாசன்’ என்னும் இடத்தில் வேறு ஏதாவதொரு பெயர் இருந்திருந்தால் நடந்திருக்குமா என்று யோசிக்கிறேன். அவருக்கு ஏன் இந்த கன்செஷன் என்பதல்ல.. அவருக்கு மட்டுமா இந்த கன்செஷன் என்பதே?

இந்த லிவிங் டூ கெதர் எல்லாம் இந்த சமூகம் ஏற்றுக் கொண்டு முதிர்ச்சியடஞ்சிடுச்சா? எனக்கு தெரிஞ்சவர கடசியா உடுமலைப்பேட்டையில் சங்கர வெட்டி கொன்னது தான் நியாபகம் இருக்கு? இங்க இவங்க இவங்க இத செஞ்சா மட்டும் தான் முற்போக்கு முன்னேற்றம் எல்லாமா? இங்க socially accepted normsனு யார் முடிவு செய்றாங்க?

ஒரு உதாரணமாக LGBTQ குழுக்களில் ஊடகத்தில், விருது நிகழ்ச்சிகளில் கலர்புல் போராட்ட களங்களில் நாம் பார்க்கும் ஆட்கள் யார்? என்ன சாதி/சமூக பின்னணியில் இருந்து வந்திருக்காங்கனு பாத்தா புரியும். அவங்க வைக்கிற கோரிக்கை, சுதந்திரம், தங்களுக்கு தேவையான உரிமை என்னனு பேசுறதிலும், அதே குழுக்களில் சாதியாலும்/வர்க்கத்தாலும் கீழே இருப்பவர்களிடமிருந்து அவர்கள் தேவைகளிலிருந்து வேறுபட்டே இருக்கும். இதுவே மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள், பெண்ணிய அமைப்புகள்னு எல்லா தளங்களிலும் பாக்கலாம்.

இங்க லிவிங் டூ கெதர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? பொது சிவில் சட்டம் பேசும்போது இதெல்லாம் எங்க வரும்? கமல்ஹாசனின் ஒழுக்க நெறி தனிநபர் சார்ந்ததா? அது விவாதத்துக்கு அப்பாற்பட்டதா? இந்த privilege எல்லாருக்கும் கிடைக்குமா? அந்த luxurious privilege கிடைக்க என்ன தான் தகுதி? ஒரு பையன் ஒரு பொண்ணு கூட பேச்சின்னு இருந்தான்கிறதுக்காகவே தலை அறுத்தாங்க இந்த ஊர்ல.. இவங்க ஒன்னா வாழ்ந்துட்டு டுவிட்டர்ல அறிவிச்சுட்டு பிரியறத பாத்தா இது வெறும் luxury இல்ல vulgar luxuryயா தான் எனக்கு தெரியுது.