தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறிய தமிழக காவல் துறையை கண்டித்து இன்று மதுரையில் உள்ள தென் மண்டல ஐ.ஜி அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் CPML (மக்கள் விடுதலை), இளந்தமிழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், SDPI கட்சி,  மனித நேய மக்கள் கட்சி, ஆதி தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் விடியல் கட்சி, ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் அமைப்பு, தமிழர் விடியல் கட்சி ,மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.

நெல்லையில் திண்டுக்கல் சிவகுருநாதன், பெண் காவலர் ராமு, திண்டுக்கல்லில் பாண்டிச்செல்வி, தேனியில் தங்கபாண்டியன்  என  குறுகிய காலத்தில் நடந்த சாதி ஆணவ படுகொலைகளுக்கு காவல் துறை  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக் காட்டினர்.

சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு காரணமான சாதி வெறி கொலையாளிளை கைது செய்ய வலியுறித்தியும் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் முழக்க்கங்கள் எழுப்பப்பட்டது.