உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள்!
இழப்பதற்கு ஒன்றுமில்லை; அடைவதற்கோர் பொன்னுலகம் உள்ளது!

என்ற மார்க்ஸ் எங்கல்ஸ் விடுத்த அறைக்கூவலை நடைமுறைபடுத்திய புரட்சிதான் நவம்பர் புரட்சி,போல்ஷ்விக் புரட்சி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிற ரஷ்யப் புரட்சி!

உழைக்கும் மக்களின் புரட்சிகர அரசாம், உலகின் முதல் கம்யூனிஸ்ட் நாட்டை அமைத்து உலக வரலாற்றை திருப்பிப் போட்ட பெருமை முழுக்க சோவியத் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தையே சேரும். பல நூறு ஆண்டுகளாக நிலப்பிரபுக்களாலும் மன்னர்களாலும் முதலாளிகளாலும் சுரண்டப்பட்ட மக்கள் வெகுண்டெழுந்து அரசைக் கைப்பற்றி அதிகாரத்தில் அமர்ந்த நாள்தான் நவம்பர் 7, 1917. அடிமைத்தலையை உடைத்தெறிந்து மானுட விடுதலை கோருகிற மார்க்சிய தத்துவம் என்பது நடைமுறையின் தத்துவம் என இந்த புவிக்கு அறிவித்தது ரஷ்யப் புரட்சி!

பாட்டாளி வர்க்கத் தலைவராம்,தோழர் லெனின் வழிகாட்டுதலில்,போல்ஷ்விக் கட்சியானது,பால்லாயிரக்கனக்கான தொழிலாளர்களும்,விவசாயிகளும் ராணுவ வீரர்களையும் ஒன்றிணைத்து, “அனைத்து அதிகாரமும் சோவியத்துக்கே”என்ற முழக்கத்தோடு உலகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்தார்கள். தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் அதிகாரத்தில் அமர்ந்தார்கள். பெரும் நிலப் பிரபுக்களின் வசமிருந்து நிலங்கள், உழைக்கும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஜெர்மனி, அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவத் தலையீடுகள், உள்நாட்டில் எதிர்ப்புரட்சியாளர்களின் தாக்குதல்கள் என அனைத்தையும் வெற்றி கொண்டு புதிய தேசிய பொருளாதாரக் கொள்கைகள் மூலமாக நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருக்கப்பட்து வளம் பங்கிட்டு கொடுக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் கல்வி தேவைகள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க உறுதிசெய்யப்பட்டது.

மானுடவரலாற்றின் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை கொண்டாடுவோம்.

வருகிற நவம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துயிருக்கும் உழைப்பாளர் சிலை முன்பு சிவப்பைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைப்பெறும்.
இடம்: உழைப்பாளர் சிலை, மெரினா கடற்கரை
நாள்: நவம்பர் – 6, மாலை 6 மணி முதல்
பரவட்டும் புரட்சி..!!
பிறக்கட்டும் கம்யூனிச சமூகம்..!!
சிவப்பைக் கொண்டாடுவோம்..!!

To Celebrate the 200th year of Karl Marx, 100th year of Russian Revolution, 50th year of Chinese Cultural Revolution and Indian Naxalbari Revolution, let us gather at Labour Statue, Marina beach on 6th November for the Red Carnival.

Place: Labour Statue, Marina Beach
Date: 6th November, 06.00 pm onwards
Let the revolution unfurl..!!
Let a communist world be born..!!
Contact :
E-mail – redcarnival16@gmail.com
Fb – https://m.facebook.com/RedCarnival16/
Ph – 9840707178 || 9087013200
#Red_Carnival
#சிவப்பைக்_கொண்டாடுவோம்