ராணுவத்தில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் விவகாரத்தில் முன்னாள் ராணுவத்தினர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அதில் ராம் கிஷண் கிரவால் என்ற முன்னாள் ராணுவ வீரர் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி நேரில் சென்றார். ஆனால் டெல்லி போலீசார் ராகுல்காந்தியை அனுமதிக்காமல், தடுத்தி நிறுத்தி, திலக் மார்க் காவல் நிலையத்துக்கு வேனில் அழைத்துச் சென்றனர். பிறகு சிறிது நேரத்தில் ராகுல்காந்தி விடுவிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, மீண்டும் ராம் கிஷண் கிரவால் குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல் சென்றதால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றர். பின்னர் சிறிது நேரத்தில் ராகுல்காந்தியை விடுவித்தனர்.

இதேபோன்று, முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினரை சந்திக்க முயன்ற காரணத்துக்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் சிசோடியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.