சி. மதிவாணன்

சி. மதிவாணன்
சி. மதிவாணன்

ராம் கிஷன் என்ற முன்னாள் ராணுவ வீரர் தற் கொலை செய்துகொண்டார். ‘ஒரு ரேன்க்.. ஒரே ஓய்வூதியம்‘ என்ற ராணுவப் பணியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தற்காலிகப் பணியாளர், ஒப்பந்த ஊழியர், நிரந்தரப் பணியாளர் ‘ஆனால், அந்தப் பிரிவு அவர், இந்தப் பிரிவு இவர் என்று கதையடித்து தொழிலாளியின் வயிற்றில் அடிக்கும் முதலாளி போலவே மோடியின் அரசு இராணுவ வீரர்கள் வயிற்றில் அடிக்கிறது.

இருந்தபோதும், தீபாவளி செய்தி, எல்லையில் நடக்கும் தியாகம் என்று படம் காட்டி, இராணுவத்தினரை முன்னிறுத்தி, போர் வெறியைக் கிளப்பி, இராணுவ வீரர்களை, எல்லைப்புர மக்ககளைக் கொன்று, இந்து மத வெறி அரசை நிலைநிறுத்த மோடி முயற்சிக்கிறார்.

ராம் கிஷனின் உயிர்த் தியாகம் மோடியின் முகத்திரையைக் கிழித்துள்ளது. இந்துவை ஆதரிப்பது அல்ல, முஸ்லீமை எதிர்ப்பதல்ல மாறாக, முதலாளித்துவக் கொள்ளையைக் காப்பாற்றுவதே மோடி – RSS மதவெறி என்பது அம்பலமாகியுள்ளது.

ராகுல் காந்தியும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ஜிரிவாலும் உள்ளிருப்புக் காவலில் என்று செய்திகள் சொல்கின்றன.

இந்து வெறியர்களாகக் காட்டிக்கொண்டு முதலாளித்துவச் சுரண்டைலைக் காப்பாற்றும் மோடி கோஷ்டியைத் தூக்கியெறிய வேண்டும்….

(ராம் கிஷன் வெறும் ராணுவ வீரர் மட்டும் அல்ல.. அவரைப் பற்றிய குறிப்பையும் படியுங்கள். http://www.newindianexpress.com/…/ram-kishan-grewal-what-do…)

சி. மதிவாணன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.