மோடி தலைமையிலான பாஜக அரசையும் அதன் பாசிச நடவடிக்கைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்து வரும் நாளிதழ் தி டெலிகிராப். டெலிகிராபின் முதல் பக்கம் கடுமையான விமர்சனத்தை பகடியாக சொல்லும்படி அமைந்திருந்தும். என்டிடீவி இந்தியா சேனலுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கும் செய்தியை மிகச் சிறப்பாக சொல்கிறது டெலிகிராபின் முதல் பக்கம்.

“டெல்லி அரசில் ஏதோ ஒன்று கெட்டுப் போயிருக்கிறது! ஒரு பக்கம் காற்றில் மாசுபாடு; இன்னொரு பக்கம் எமர்ஜென்சியைப் போல ஒளிபரப்புக்குத் தடை” என முகப்புப் பக்க வாசகங்கள் தெரிவிக்கின்றன.

விவரமான செய்தியாக என்டிடீவி இந்தியா சேனலுக்கு தடை விதிக்கப்பட்டதும் அதைக் கண்டித்து ஊடக சங்கங்கள் தெரிவித்த கண்டனமும் பதிவாகியுள்ளது.