தமிழ் ஸ்டுடியோ வெளியிட்ட செய்தி குறிப்பு:

நடிகர் சிவக்குமாரின் 75 பிறந்தநாளையொட்டி அவரது கலையுலக வாழ்க்கை பற்றி ஒரு புத்தகமும், சிவக்குமாரின் ஓவியங்களை உள்ளடக்கிய ஒரு புத்தகமும் சமீபத்தில் வெளியானது. அந்த இரண்டு புத்தகங்களும் தற்போது பியூர் சினிமா புத்தக அங்காடியில் விற்பனைக்கு கிடைக்கிறது. எதிர்வரும் சனிக்கிழமை தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் சிவக்குமார் பியூர் சினிமா புத்தக அங்காடிக்கு வருகை புரிய உள்ளார். அவரது இரண்டு புத்தகங்களையும் வாங்க விரும்பும் நண்பர்கள், நடிகர் சிவகுமாருக்கு வாழ்த்து சொல்ல விரும்பும் நண்பர்கள் சனிக்கிழமை பியூர் சினிமா புத்தக அங்காடிக்கு வந்துவிடுங்கள். சிவக்குமார் புத்தகங்களை அவரது கையொப்பத்துடன் வாங்கி செல்லலாம். அவருடன் உரையாடலாம். இரண்டு புத்தகங்களும் அன்று ஒருநாள் மட்டும் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

05-11-2016, சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.