யாழ் மண்ணில் முதல் தடவையாக ஹோலி பண்டிகை, வரும் 20ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளதாக ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது. யாழ் மாநகர சபை மைதானத்தில் காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை இந்திய தூதரகம் நடத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து இலங்கை வாழ் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Gowripal Sathiri Sri:

ஹோலிப் பண்டிகை பங்குனி மாதத்திலேயே இந்தியாவின் வட மாநிலங்களில் கொண்டாடப் படுவது வளமை. தமிழகத்தில் கூட பெரியளவு கொண்டாடப்படாத பண்டிகை யாழ்ப்பாணத்தில் அதுவும் கார்த்திகை மாதத்தில் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன ஒரு பண்டிகை எப்படி வேறு வேறு மாதத்தில் நடக்கும் ? இது கோலிப் பண்டிகையல்ல .. போலிப்பண்டிகை .. # மாவீரர் வாரம் #

அருமைத்துரை யசீகரன்:

பேசாம தினமும் இதயே பாடிட்டு வாழ்ந்திடலாம் போல

சன கண மன அதிநாயக செய கே
பாரத பாக்கிய விதாதா.
பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல சலதி தரங்கா.
தவ சுப நாமே சாகே,
தவ சுப ஆசிச மாகே,
காகே தவ செய காதா.
சன கண மங்கள தாயக செயகே
பாரத பாக்கிய விதாதா.
செய கே, செய கே, செய கே,
செய செய செய, செய கே.

#யாழ்ப்பாணம் #இந்தியாவின் #மாநிலம் அல்ல

#ஹோலிப்பண்டிகை #அகிம்சைதினம் #ரவீந்திரனாத்தாகூர் #யோகா #அப்துல்கலாம்
#யாழ்ப்பாணம் #வன்திணிப்பு #ஆக்கிரமிப்பு #இந்தியா

Ratnasingham Annesley:

யார் இந்த கோமாளிகள்? இதுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் என்ன தொடர்பு? என்னதான் நடக்குது யாழில்?

Jeyan Deva:

யாழ். பல்கலைக் கழகத்தில் உண்ணா விரமிருந்த மாணவிகள் கடத்தப்பட்டு அடையாறு மாளிகையொன்றில் கொண்டாடிய ஹோலிப் பண்டிகை ஒரு போராட்டத்தின் தலைவிதியையே எவ்வாறு மாற்றியது என்பது நினைவுக்கு வந்து தொலைக்கிறது..

Suratha Yarlvanan:

இவர்கள் கோமாளிகள் அல்ல..கலந்து கொள்பவர்கள்தான்..முடிந்தால் இது போன்ற நிகழ்வுகளை சிங்களப்பகுதிகளில் பெரகரா சமயம் வைத்துப் பார்க்கட்டும்.

செந்தமிழினி:

இந்திய அரசின் அனுசரணையோடு இலங்கையில் நடந்த தமிழின படுகொலைக்கு இன்னமும் நீதி கிட்டவில்லை. அதற்குள் ஹோலி பண்டிகை கூத்தா?

அமைதி படை என சொல்லி ஆக்கிரமிப்பு படையாக எம் மண்ணில் ஊடுருவி ஆக்கிரமிக்க நினைத்த இந்திய ஏவல் படையை எம் மக்கள் போராட்டம் மண்ணை விட்டு விரட்டி அடித்தது. இன்று இந்தியா மெல்ல மெல்ல தனது ஆக்கிரமிப்பு கரங்களை இலங்கைக்குள் நீட்டி வேரூன்ற முனைகிறது.

இலங்கை மக்கள் விழிப்பு கொள்ள வேண்டிய காலம். தமிழினம் இந்திய ஆக்கிரமிப்பை முனைப்போடு எதிர்க்க வேண்டிய காலம்.தமிழினம் தனித்துவமான பண்பாட்டு வலிமை கொண்ட இனம்.இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்களுக்கு என்றும் தனித்துவமான கலைபண்பாட்டு சிறப்புகள் உண்டு.

இந்நிலையில் இந்தியத்துவம் இலங்கைக்குள் இன அழிப்பின் ஒரு கூறாக திணிக்கப்பட்டு இலங்கை வாழ் மக்களின் தனித்துவத்தை சிதைப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

ஏற்கனவே பாலன் தோழர் எழுதிய “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” என்ற நூலில் சொல்லப்பட்டது போல பன்முகப்பட்ட ஆக்கிரமிப்புகள் வரிசையில் இது கலை கலாச்சார பண்பாட்டு வடிவிலான ஆக்கிரமிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழகத்தில் கூட கொண்டாடப்படாத வடஇந்திய ஹோலி பண்டிகையினை ஈழத்தில் தமிழ் மக்கள் கொண்டாட சொல்வதன் நோக்கம் கார்த்திகை மாதத்தின் மாவீரர் மாத எழுச்சியை முடக்கவே.

மாவீரர்கள் நினைவில் உலக தமிழ் மக்கள் உணர்வு ரீதியாக ஒன்று பட்டு எழுகின்ற எழுச்சியை தடுக்க ஹோலிப் பண்டிகையை வஞ்சனையோடு இந்தியா யாழில் இக்காலத்தில் கொண்டு வருகிறது.

இந்தியாவுக்கு எக்காலத்திலும் ஈழ தமிழர்கள் மீதோ இலங்கை தமிழ் சிங்கள மக்கள் மீதோ அக்கறை இருந்ததில்லை.

தமிழின பகையை தமிழகத்திலேயே கக்கும் இந்தியா ஈழ தமிழர்களை காக்கும் என இனியும் எவரும் சொன்னால் தமிழ் மக்கள் அவர்களை இந்தியாவோடு சேர்த்து தூக்கி எறிய தயங்கக் கூடாது.

முள்ளிவாய்க்காலில் நாங்கள் ஹோலிப்பண்டிகையின் சிவப்பை குருதி தோய்ந்த எம் மக்களின் மரணங்களில் போதியளவில் கண்டுவிட்டோம்.

இது கல்லறை நாயகர்களை தொழுது எழுந்து வல்லமை பெறும் காலம்! சூழ்ச்சியின் அடையாளமான ஹோலியை தடுத்து நிறுத்துவோம்! முள்ளிவாய்க்காலில் மட்டுமல்லால் கலாச்சார ரீதியாகவும் நடைபெறும் அனைத்து இனப்படுகொலையின் கூறுகளையும் விழிப்போடு தடுத்து நிறுத்துவோம்!

Balan tholar:

ஹோலிப் பண்டிகை- இலங்கை மீதான இன்னொரு இந்திய கலாச்சார ஆக்கிரமிப்பு!

எதிர்வரும் 20 ம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக ஏற்பாட்டில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹோலிப் பண்டிகை ஒரு வட இந்திய பண்டிகை. அது இந்தியாவில் தமிழ்நாட்டில்கூட கொண்டாப்படுவதில்லை.

ஆனால் அப் பண்டிகை எதற்காக அதுவும் இந்த மாதம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கு இந்திய தூதரால் ஏற்பாடு செய்யப்படுகிறது?

இந்தமாதம் ஈழத் தமிழ் மக்கள் இறந்த தம் உறவினர்களை மாவீரர்களாக உலகமெல்லாம் நினைவு கொள்ளும் மாதமாகும்.

மாவீரர் நினைவு நாளைக் குழப்புவதற்காகவே இந்திய அரசினால் திட்டமிட்டு இந்த மாதம் 20ம் திகதி இவ் விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது.

ஏனெனில் ஹோலிப் பண்டிகைக்கும் ஈழத் தமிழருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது மட்டுமல்ல இந்த பண்டிகை இந்த மாதத்தில் எங்குமே கொண்டாடப்படுவதும் இல்லை.

வாள் வெட்டு மலிந்து காணப்படும் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீது நிறப் பவுடரை பூசும் இந்த ஹோலிப் பண்டிகையினால் இன்னும் என்ன விபரீதங்கள் நிகழப் போகுதோ தெரியவில்லை.

இந்தியா ஈழத் தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பினால் இந்த பண்டிகையை அறிமுகப்படுத்துகின்றது என்று இந்தியாவில் வாழ்ந்து வரும் மாவை சேனாதிராசா சொல்லக்கூடும்.

அதேபோல், இந்தியாவின் இந்த பண்டிகையை தடுத்தால் சீனாவின் பண்டிகை வந்துவிடும் என்று இந்திய விசுவாசி சம்பந்தர் அய்யா கூறக்கூடும்.

அண்மையில் இந்தியாவில் ஒரு குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பங்களாதேஸ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஈழ அகதிகளுக்கு வழங்கப்படவில்லை.

ஈழத் தமிழ் மக்கள் மீது கொண்ட அக்கறையினால்தான் ஹோலிப்ட பண்டிகையை இந்தியா யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்கிறது எனில் 33 வருடங்களாக தமிழகத்தில் அகதியாக இருக்கும் ஈழ அகதிகளுக்கு ஏன் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை?

இந்த தமிழ் தலைவர்களிடம் நான் கேட்க விரும்புவது என்னவெனில், ஏன் இந்தியா ஈழ தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றது?

குடியுரிமை வழங்காவிட்டாலும் பரவாயில்லை. சட்டவிரோதமாக பல ஈழ அகதிகள் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்து அவர்கள இலங்கை திரும்பிவர யாழ் இந்திய தூதர் வழி செய்வாரா?

ஹோலிப் பண்டிகை என்னும் பெயரில் யாழ் தமிழ் பெண்களுக்கு நிறப்பவுடர் பூச வரும் யாழ் இந்திய துணைத்; தூதரிடம் இதனை யாராவது கேட்பீர்களா?