சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பும் 5 பெண் வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.

இதுவரை கேரள அரசு தன்னுடைய வாதத்தில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது இயலாத என்றே வாதிட்டு வந்தது. இந்நிலையில் இன்று நடந்து விசாரணையில் அனைத்து வயது பெண்களை வழிபட அனுமதிக்கத் தயார் என தெரிவித்துள்ளது.  பூப்படையாத பெண்கள், மாதவிடாய் நின்ற பெண்கள் மட்டுமே இதுவரை வழிபாட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.