ஆந்திராவிலிருந்து குடிநீருக்காக தமிழகத்திற்கு திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீரை விவசாயிகள் இடையிலேயே திருடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆந்திர பொதுப்பணித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கண்டலேறு அணையிலிருந்து 1,600 கனஅடி திறக்கப்படுகிறது. ஆனால், தமிழக எல்லையான ஜீரோ பாய்ண்டில் 230 கன அடி நீர் மட்டுமே வந்தடைவதாகக் கூறப்படுகிறது. இடையில் காளஹஸ்தி, வேங்கடகிரி, சத்யவேடு பகுதிகளைச் சேர்ந்த ஆந்திர விவசாயிகள், நீரை குழாய் மூலம் மோட்டார் போட்டு உறிஞ்சி பாசனத்திற்காக பயன்படுத்துகின்றனர். மின் மோட்டார், ஆயில் எஞ்சின் ஆகியவற்றின் உதவியோடு குடிநீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் காளஹஸ்தி பகுதியில் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மதகுகளை ஆந்திர விவசாயிகள் இரவில் திறந்து விட்டு நீரைத் திருடுவதாகவும‌ கூறப்படுகிறது.