கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பை வரவேற்றுள்ள நடிகர் ரஜினி காந்த்,  இதன் மூலம் புதிய இந்தியா பிறந்தது என தனது ட்விட்டர் பதிவில் புகழ்ந்திருக்கிறார்.

ரஜினியின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வந்தபடியே உள்ளன.

திரை செயல்பாட்டாளர் மோ. அருணின் கருத்து இது:

ரஜினி எனும் சூப்பர் ஸ்டார்…

நதிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு ஒரு கோடி தருகிறேன் என்று சொல்லும் மூடர்களும், கருப்பு பணத்தை ஒழிக்க அன்றாடங்காய்ச்சிகளை காய்ச்சி எடுப்பவர்களை நோக்கி புதிய இந்தியாவை உருவாக்குபவர்கள் என்று சொல்லும் முட்டாள்களும்தான் இந்த தேசத்தின் சூப்பர் ஸ்டார்கள்…