இந்தியா

ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது: மோடி அதிரடி

நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் நேரலையாக சிறப்புரையாற்றினார். அப்போது கள்ள நோட்டுகள், கருப்புப் பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்கான பல முக்கிய அதிரடி நடவடிக்கைகளை அவர் அறிவித்தார். தனது 40 நிமிட சிறப்புரையில்

‘செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் அவற்றை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் வரும் 10-ஆம் தேதி முதல், அடுத்த மாதம் (டிசம்பர்) 30-ஆம் தேதிக்குள் (50 நாள்களுக்குள்) அவற்றை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
அதேபோல், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை அவற்றை விடக் குறைந்த மதிப்பிலான ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 போன்ற நோட்டுகளாக வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் வரும் 10ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிக்குள் (14 நாள்களுக்குள்) மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு மாற்ற முன்வரும்போது, பான் அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு அடையாள அட்டைகளைக் கொண்டுவருவது அவசியமாகும்.

ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.4,000 மதிப்பிலான 500, 1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும். இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய இயலாதவர்கள், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அவற்றை டெபாசிட் செய்து கொள்ளலாம். அப்போது அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய காரணத்தைக் குறிப்பிட்டு, அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

வழக்கம்போல், ரூ.100, 50, 20, 10, 5, 2, 1 நோட்டுகளும், நாணயங்களும் தொடர்ந்து செல்லுபடியாகும். விமான டிக்கெட்டுகள், ரயில்வே முன்பதிவுகள், அரசுப் பேருந்து டிக்கெட்டுகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் வரும் 11, 12-ஆம் தேதி நள்ளிரவு வரை செல்லுபடியாகும். தவிர, ரூ.2000 நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. வங்கிகள் புதன்கிழமை மூடப்படும். இது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். அதைப் பொருட்படுத்த வேண்டாம். தேசத்தைக் கட்டமைப்பதிலும், மறுநிர்மாணம் செய்வதிலும் வரலாற்றில் எப்போதாவதுதான் ஒரு வாய்ப்பு கிடைக்கும்” என்றார் மோடி.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s