சி. மதிவாணன்

சி. மதிவாணன்
சி. மதிவாணன்

வெளியிடப்பட்டுள்ள புதிய 500/ 2000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது அரசியல் சட்டத்திற்கும், இந்திய அரசின் மொழிக்கொள்கைக்கும் விரோதமானது. காவிப் பாசிசத்தின் ஜனநாயக/ அரசியல் சட்ட விரோத நடவடிக்கை.

இந்தி மொழியில் வெளியிடப்படும் மத்திய அரசின் ஆவணங்களில் தேவநாகரி எண்கள் பயண்படுத்தப்படலாம். ஆனால், வெளியிடப்பட்டுள்ள ரூபாய் தாள்கள் மத்திய அரசின் ஆவணங்கள் அல்ல.

மத்திய அரசின் ஆவணங்கள் அல்லாத போது நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் எண்களை, அதாவது இந்தோ- அரேபிய எண்களை , அதாவது சர்வதேச எண்கள் முறையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், அரசியல் சட்டம் மற்றும் மொழிக் கொள்கையை மீறி இந்தி எண்களைப் பயன்படுத்தியிருக்கிறது மோடி அரசு.

காவிகளின் சதிச் செயல்கள் நேரடியாக அரங்கேறுவதில்லை. மறைமுகமாக, நாம் ஏமாறும் நேரத்தில் அரங்கேறுகின்றன. அரசியல் சட்டம் மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட மொழிக்கொள்கையை மீறும் காவிகளைத் தோற்கடிக்க, தேசிய இனங்களின் மொழி உரிமையைக் காக்க குரல் கொடுப்போம்.

சி. மதிவாணன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.