இந்தியா

ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க மேலும் இரண்டு நாள்களாகும்: ரிசர்வ் வங்கி

புதிய நோட்டுகளுக்கான தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங்கள் முழுவீச்சில் இயங்கி வருவதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சார்பில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில்,

நாடு முழுவதிலும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து ரூபாய் நோட்டுகளும் போதுமான அளவு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வங்கிக் கிளைகளின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் அந்த மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மக்களின் தேவைகளைச் சமாளிப்பதற்காக, ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பழைய நோட்டுகளை சுமுகமாகவும் இடையூறு இல்லாத வகையிலும் புதிய நோட்டுகளாக மாற்றித் தரும் மிகப்பெரிய பொறுப்பு, வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளை ஏற்கும் வகையில் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க மேலும் இரண்டு நாள்களாகும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், கடன் அட்டைகள், பற்று அட்டைகள், இணைய வழி வங்கி, செல்லிடப்பேசி வங்கி உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளைத் தொடங்குபவர்களுக்கு அவர்கள் கேட்டுக்கொண்டால், வங்கி அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளால், பணத்தை நேரடியாகக் கையாளுவது குறைந்து தொழில்நுட்ப வசதிகளின் மூலம் பயன்படுத்துவது அதிகரிக்கும். மேலும், பணத்தை மாற்றுதல், வைப்புகளாக செலுத்துதல் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து கண்காணித்து வருகிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s