கறுப்புப் பணம் எல்லாம் தங்க நாணயங்களாக மாற்றப்பட்டுவிட்டதாக மார்க்கிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார் யெச்சூரி…

“ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்புப் பணம் வைத்திருந்த அனைவரும் அதை தங்க நாணயங்களாகவே மாற்றிவிட்டனர். விடிய விடிய நகைக் கடைகளை திறந்து வைக்க யார் அனுமதி கொடுத்தது? ரூபாய் நோட்டு பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.

புதிய ரூ2,000 நோட்டுகளால் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்து விட முடியாது. கருப்பு பண மீட்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்துவிட்டதை திசை திருப்பும் வகையில்தான் மோடியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. மருத்துவமனை, ரயில் நிலையங்களில் டிசம்பர் 31-ந் தேதி வரை பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளை வாங்க வேண்டும்” என்று சீதாராம் யெச்சூரி கூறினார்.