கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தனது தோட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளார். பவானிசாகர் அணையில் 28 நாட்களே தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காளிங்கராயன் கால்வாய் பகுதிக்கு சரிவர தண்ணீர் வரவில்லை. இந்த பாசன பகுதியில் உள்ள இவரது நிலத்தில் சாகுபடி செய்த மஞ்சள் தண்ணீர் இன்றி கருகியுள்ளது. இதனை கண்ட அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் பயிர் கருகிவருவதால், விவசாயிகள் தற்கொலை செய்துவரும் நிலையில் தற்போது ராமலிங்கம் தற்கொலை செய்துகொண்டது விவசாயிகளை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.